கும்பகோணம் சாரபரமேஸ்வரர் திருக்கோவிலில் 70 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற திருக்கல்யாணம்


கும்பகோணத்தை அடுத்த திருச்சேறை ஞானவல்லி உடனுறை சாரபரமேஸ்வரர் திருக்கோவிலில் 70 ஆண்டுகளுக்கு பிறகு வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருக்கல்யாணம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. கும்பகோணத்தை அடுத்த திருச்சேறை அருள்மிகு செந்நெறிச் செல்வனார் ஸ்ரீ ஞானவல்லி உடனுறை ஸ்ரீ சாரபரமேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இத்திருக்கோவில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகிய நாயன்மார்களால் போற்றிப் பாடப்பெற்ற மகத்துவங்கள் பல கொண்ட அற்புத திருக்கோவில் ஆகும். இங்கு 70 ஆண்டுகளுக்கு பிறகு வைகாசி விசாகத்தின் முன்னிட்டு பத்து நாள் உற்சவம் நடைபெறுகிறது முதல் நாளான 09.05.2019 அன்று கொடியேற்றம் வெகு விமர்சியாக நடைபெற்றது. இரண்டாம் நாள் சேஷ வாகனத்திலும் மூன்றாம் நாள் சூரிய ப்ரபை வாகனத்திலும், நான்காம் நாள் பூத வாகனத்திலும், ஐந்தாம் நாள் ரிஷப வாகனத்தில்,ஆறாம் நாள் யானை வாகனத்திலும் முக்கிய நிகழ்ச்சியான ஏழாம்நாள் திருக்கல்யாணம் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
இதில் பக்தர்கள் சீர்வரிசை எடுத்து வந்து சிவாச்சாரியார்கள் ஹோமம் வளர்த்து மங்கல வாத்தியங்களுடன் சிறப்பாக திருக்கல்யாணம் நடைபெற்றது.,திருக்கல்யாணத்தில் பக்தர்கள் சீர்வரிசை எடுத்து வந்து சிவாச்சாரியார்கள் ஹோமம் வளர்த்து மங்கல வாத்தியங்களுடன் சிறப்பாக திருக்கல்யாணம் நடைபெற்றது. இத்திருக்கல்யாணத்தில் ஸ்ரீ ஞானவல்லி உடனுறை ஸ்ரீ சாரபரமேஸ்வரர் திருக்கல்யாண அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார் திருக்கல்யாணம் முடிந்து மகா தீபாரதனை நடைபெற்றது . இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை திருக்கோவில் பணியாளர்கள் உபயதாரர்கள் கிராமவாசிகள் சிறப்பாக செய்திருந்தனர். newstm.in

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*