மம்தாவுக்கு அநீதி இழைக்கும் பிரதமர் மோடி: மம்தாக்கு மாயாவதி ஆதரவு!!


மேற்கு வங்காளம் முதல் மந்திரி மம்தா பானர்ஜிக்கு எதிராக பாஜகவினர் செயல்பட்டு வருவதாக மாயாவதி குற்றசாட்டு!! இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 6 கட்ட தேர்தல் வாக்குப்பதிவுகள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில், தேர்தல் பிரட்சாரங்கள் சூடுபிடித்து வருகிறது. இதை தொடர்ந்து, வரும் 19 ஆம் தேதியில் ஏழாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், மேற்கு வங்காளம் மாநிலத்தில் அமித் ஷா பேரணியின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுவதால் ஒருநாள் முன்னதாகவே அங்கு பிரசாரத்தை நிறுத்துமாறு தேர்தல் கமிஷன் நேற்று உத்தரவிட்டது. இதையடுத்து, தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவுக்கு மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவருக்கு ஆதரவாக பல்வேறு தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மேற்கு வங்காளம் முதல் மந்திரி மம்தா பானர்ஜிக்கு எதிராக பாஜகவினர் செயல்பட்டு வருகின்றனர் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோர் மம்தா பானர்ஜியை குறிவைத்து செயல்பட்டு வருகின்றனர். நாட்டின் பிரதமராக இருப்பவர் அநீதி இழைப்பது அவரது பதவிக்கு பொருத்தமாக இருக்காது. மேற்கு வங்காளத்தில் இன்று இரவு 10 மணி வரை பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது. ஏனென்றால் மாலையில் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரசார கூட்டங்கள் நடைபெற உள்ளது. தடைவிதிக்க வேண்டும் என முடிவெடுத்த தேர்தல் ஆணையம், அதை காலை 10 மணி முதலே அறிவித்திருக்கலாமே என கேள்வி எழுப்பியுள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*