Copyright TAMIL NEWS. All rights reserved.

தமிழ் செய்திகள்

Tamil News | தமிழ் செய்திகள் | Online Tamil News | Latest Tamil News | Live Tamil News

ஆபரேஷன் பாமக.. பாமக கூடாரத்தை காலி செய்யும் டிடிவி தினகரன்


தினகரன் ஒரு தீர்க்கமான முடிவில்தான் இருக்கிறார்.. அடுத்தடுத்து அவரது மூவ்களை கண்டு ஆட்டம் கண்டுவருகிறது அரசியல் களம்.. குறிப்பாக பாமக!

அதிமுகவுடன் கூட்டணி வைத்ததில் இருந்தே ஏகப்பட்ட அதிருப்திகள் பாமகவுக்குள் நிலவி வருகிறது. ராஜேஸ்வரி பிரியா, நடிகர் ரஞ்சித், பொங்கலூர் மணிகண்டன் போன்றோர் பாமகவிலிருந்து விலகினார்கள்.

இதில் ரஞ்சித் மற்றும் பொங்கலூர் மணிகண்டன் ஆகிய இருவரும் தினகரனின் அமமுகவில் இணைந்தனர்

கட்சியை விட்டு வெளியே வந்ததுடன், ரஞ்சித், பொங்கலூர் மணிகண்டன் அமமுகவிலும் இணைந்தனர். அப்போதே தினகரனின் இந்த அதிரடி மூவ் பெரிதாக பேசப்பட்டது. காரணம், தென் தமிழகம் குறிப்பாக மதுரை மண்டலத்தில் உள்ள தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் அமமுகவை தினகரன் வலுவான ஒன்றாக வளர்த்து வைத்துள்ளார்

ஆனால் வட மாவட்டங்களில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வேரூன்றவில்லை. இதனால்தான் பாமகவின் முக்கிய தலைவர்களை அமமுக குறி வைத்து அதன்படியே சாதித்து காட்டியது. இந்நிலையில் மேலும் ஒரு மாநிலத் துணைத் தலைவர், இரு மாவட்டச் செயலாளர்கள் பாமகவிலிருந்து விலகி தினகரன் கட்சியில் இணைந்துள்ளனர்.

இந்த நிலையில் தற்போது பாமகவின் மாநிலத் துணைத் தலைவர் மற்றும் இரண்டு மாவட்டச் செயலாளர்கள் பாமகவிலிருந்து விலகி தினகரன் கட்சியில் இணைந்துள்ளனர். பாமகவின் மாநில துணைத் தலைவர் காங்கயம் கி.மாதவன், மற்றும் மாவட்டச் செயலாளர்கள் இரா.கணேஷ், கொங்கு கிஷோர் ஆகியோர் நேற்று சூலூரில் பிரச்சாரத்துக்கு வந்த தினகரன் முன் தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

இதில் காங்கயம் மாதவன் கட்சி தாவியதுதான் கொஞ்சம் ஷாக்கான விஷயம். ஏனென்றால், இவர் அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்தவர். ரொம்ப காலமாகவே அதாவது, 1989 முதல் பாமகவில் நிறைய பொறுப்புகளை வகித்து வந்தவர். 30 வருஷமாக கட்சியில் இருந்தவர் இப்படி திடீரென இந்த சமயத்தில் அங்கிருந்து விலகியது எதிர்பாராத ஒன்றுதான்.பாமகவின் கூடாரம் கொஞ்சம் கொஞ்சமாக காலியாகி அமமுகவில் இணைந்து வருவதால் பாமக தரப்பு அதிர்ச்சியில் உள்ளதுஉலகக்கோப்பை போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஜை ரிச்சர்ட்சன் விலகல்

லாரியில் சிக்கி தரையோடு தரையாக நசுங்கி மடிந்த மனிதர் – கொடூர காட்சி

Related Posts

18 தொகுதி இடைத் தேர்தலில் டிடிவி தினகரனுக்கே வெற்றி வாய்ப்பு! பாமக தேமுதிக கைகொடுக்காது!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடைபெறுகிறது. தமிழக அரசியலில் பெரும்…


3 பேர் தகுதி நீக்க நடவடிக்கை எல்லாம் தேவையா? அதிமுக தீவிர விஸ்வாசிகளின் குரல்

அதிமுக – அமமுக என அம்மா பெயரில் செயல்ப்பட்டு வரும் இரு கட்சிகள் இப்படி தேவையில்லாமல் மோதிக்கொள்வதை விட இணைந்து…


பெட்ரோல் குண்டு வீச்சுக்கு கூலாக சிரித்துக் கொண்டே “பாத்துக்கலாம்” என்று சொன்ன டிடிவி தினகரன்

சென்னை அடையாறு கற்பகம் அவென்யூ பகுதியில் டி.டி.வி. தினகரன் வசித்து வருகிறார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில்…


இயக்குநர் பாரதிராஜா வைரமுத்து ஆகியோருடன் மக்கள்செல்வர்

இயக்குநர் பாரதிராஜா, நடிகர் ஆர்.கே.சுரேஷ், கவிப்பேரரசர் வைரமுத்து ஆகியோருடன் மக்கள்செல்வர் #TTVDhinakaran


தினகரன் கட்சியில் இணைந்தாா் பாமகவின் மாநில துணைத்தலைவா் ரஞ்சித்!

அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் பாமகவில் இருந்து விலகிய அக்கட்சியின் மாநில துணைத்தலைவா் ரஞ்சித், டிடிவி தினகரனின் அமமுகவில் இன்று இணைந்தாா்….
அண்மை செய்திகள்