Copyright TAMIL NEWS. All rights reserved.

தமிழ் செய்திகள்

Tamil News | தமிழ் செய்திகள் | Online Tamil News | Latest Tamil News | Live Tamil News

ஆபரேஷன் பாமக.. பாமக கூடாரத்தை காலி செய்யும் டிடிவி தினகரன்


தினகரன் ஒரு தீர்க்கமான முடிவில்தான் இருக்கிறார்.. அடுத்தடுத்து அவரது மூவ்களை கண்டு ஆட்டம் கண்டுவருகிறது அரசியல் களம்.. குறிப்பாக பாமக!

அதிமுகவுடன் கூட்டணி வைத்ததில் இருந்தே ஏகப்பட்ட அதிருப்திகள் பாமகவுக்குள் நிலவி வருகிறது. ராஜேஸ்வரி பிரியா, நடிகர் ரஞ்சித், பொங்கலூர் மணிகண்டன் போன்றோர் பாமகவிலிருந்து விலகினார்கள்.

இதில் ரஞ்சித் மற்றும் பொங்கலூர் மணிகண்டன் ஆகிய இருவரும் தினகரனின் அமமுகவில் இணைந்தனர்

கட்சியை விட்டு வெளியே வந்ததுடன், ரஞ்சித், பொங்கலூர் மணிகண்டன் அமமுகவிலும் இணைந்தனர். அப்போதே தினகரனின் இந்த அதிரடி மூவ் பெரிதாக பேசப்பட்டது. காரணம், தென் தமிழகம் குறிப்பாக மதுரை மண்டலத்தில் உள்ள தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் அமமுகவை தினகரன் வலுவான ஒன்றாக வளர்த்து வைத்துள்ளார்

ஆனால் வட மாவட்டங்களில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வேரூன்றவில்லை. இதனால்தான் பாமகவின் முக்கிய தலைவர்களை அமமுக குறி வைத்து அதன்படியே சாதித்து காட்டியது. இந்நிலையில் மேலும் ஒரு மாநிலத் துணைத் தலைவர், இரு மாவட்டச் செயலாளர்கள் பாமகவிலிருந்து விலகி தினகரன் கட்சியில் இணைந்துள்ளனர்.

இந்த நிலையில் தற்போது பாமகவின் மாநிலத் துணைத் தலைவர் மற்றும் இரண்டு மாவட்டச் செயலாளர்கள் பாமகவிலிருந்து விலகி தினகரன் கட்சியில் இணைந்துள்ளனர். பாமகவின் மாநில துணைத் தலைவர் காங்கயம் கி.மாதவன், மற்றும் மாவட்டச் செயலாளர்கள் இரா.கணேஷ், கொங்கு கிஷோர் ஆகியோர் நேற்று சூலூரில் பிரச்சாரத்துக்கு வந்த தினகரன் முன் தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

இதில் காங்கயம் மாதவன் கட்சி தாவியதுதான் கொஞ்சம் ஷாக்கான விஷயம். ஏனென்றால், இவர் அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்தவர். ரொம்ப காலமாகவே அதாவது, 1989 முதல் பாமகவில் நிறைய பொறுப்புகளை வகித்து வந்தவர். 30 வருஷமாக கட்சியில் இருந்தவர் இப்படி திடீரென இந்த சமயத்தில் அங்கிருந்து விலகியது எதிர்பாராத ஒன்றுதான்.



பாமகவின் கூடாரம் கொஞ்சம் கொஞ்சமாக காலியாகி அமமுகவில் இணைந்து வருவதால் பாமக தரப்பு அதிர்ச்சியில் உள்ளது



ஆபரேஷன் பாமக.. பாமக கூடாரத்தை காலி செய்யும் டிடிவி தினகரன் | Operation PMK | TTV Dhinakaran
[youtube https://www.youtube.com/watch?v=gZHIuZfRMHA?feature=oembed&w=459&h=344]
https://www.youtube.com/watch?v=gZHIuZfRMHA

திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

உலகக்கோப்பை போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஜை ரிச்சர்ட்சன் விலகல்

Related Posts

மோடி நல்லாட்சி செய்கிறார் – ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள 2.O திரைப்படம் பொதுமக்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது. தற்போது ரஜினி `பேட்ட’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்தப்…


அமமுக தலைமை கழக அலுவலகம் திறப்பு விழா

அமமுக தலைமை கழக அலுவலகம் திறப்பு விழா | AMMK Head Office | TTV Dhinakaran அமமுக தலைமை…


சகோதரத்துவத்தை தேசத்திற்கு எடுத்துரைத்தவர் வாஜ்பாய், – டிடிவி தினகரன்

சகோதரத்துவத்தை தேசத்திற்கு எடுத்துரைத்தவர் வாஜ்பாய், அவரது மறைவு செய்தி கேட்டு வேதனை அடைந்தேன் – தினகரன் #Vajpayee | #RIPVajpayee…


சென்னையில் மார்ச் 11-ல் அ.ம.மு.க. ஆலோசனை கூட்டம்!

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வரும் திங்கள்கிழமை, சென்னை அசோக் நகரில் உள்ள அ.ம.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளதாக…


டிடிவி தினகரன் தரப்பிற்கு பொதுச் சின்னம்- உச்சநீதிமன்றம் அதிரடி!

‘அதிமுக’ என்ற பெயர் மற்றும் ’இரட்டை இலை’ சின்னம் தொடர்பான வழக்கில், ஓபிஎஸ் – ஈபிஎஸ் தரப்பே உண்மையான அதிமுக,…




அண்மை செய்திகள்