Thu. Jul 18th, 2019

Tamil News

Latest Tamil News , Tamil Cinema updates, Political Tamil News, Tamil Actress HD stills, Tamil Cinema First look, Trailors, Teasers and Shooting spot updates

மு.க.ஸ்டாலின் சவாலுக்கு தமிழிசை பதில்!

1 min read

எனக்கு வந்த தகவலின் அடிப்படையிலேயே, பா.ஜ.கவுடன் தி.மு.க கூட்டணி பேசியது என்று கூறினேன் என்று பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.கவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக தி.மு.க பேச்சுவார்த்தை நடத்தியது என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். இதுதொடர்பாக, இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, பா.ஜ.கவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக, தி.மு.க பேசியது உண்மைதான் என்று தெரிவித்தார்.அதனையடுத்து, மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ‘பா.ஜ.கவுடன் நான் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தியதாக நிரூபித்தால் நான் அரசியலிலிருந்தே விலகத் தயார். நிரூபிக்காவிட்டால், தமிழிசை சௌந்தர்ராஜனும், மோடியும் அரசியலிலிருந்து விலகத் தயாரா?’ என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

அதனையடுத்து, மு.க.ஸ்டாலின் அறிக்கை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன், ‘பா.ஜ.கவுடன் தேர்தல் கூட்டணி தொடர்பான திமுக பேசியதாக எனக்கு வந்த தகவலின் அடிப்படையில் கூறினேன். என்னுடைய அரசியல், பொய் சொல்லாத, ஊழல் செய்யாத, நேர்மையான அரசியல் பாரம்பரியத்தைக் கொண்டது.

என்னுடைய அரசியல் வாழ்க்கை என்றும் நேர்மையானது. தி.மு.க சார்பில் பேச்சுவார்த்தை நடத்தியதை, எப்போது நிரூபிக்க வேண்டுமோ? அப்போது நிரூபிப்பேன். நான், எப்போதும் உண்மைத் தகவல் இல்லாமல் பேசமாட்டேன். கருணாநிதியின் மகன் நீண்ட நாள் அரசியலில் இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். என்னை, அரசியலை விட்டு விலகச் சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை. மோடி அரசியலில் இருக்கவேண்டுமா என்பது பற்றி பேசவும் ஸ்டாலினுக்கு உரிமை இல்லை’ என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.