தர்மபுரி மாவட்டத்தில் மது விற்பனை செய்த 8 பேர் கைது


தர்மபுரி: தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் உத்தரவின் பேரில் தருமபுரி மாவட்ட போலீசார் கள்ளத்தனமாக மது விற்பவர்கள் குறித்து ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது பாட்டிலை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்தனர். இதில் தருமபுரியில் ஒருவரும், அரூரில் 2 பேரும் மற்றும் பென்னாகரதில் 5 பேரும் கைது செய்யப்பட்டனர். தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 60 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*