தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் – கோதண்டராமர் சிலைக்கு சிக்கல்


பெங்களூருவுக்கு எடுத்து செல்லப்படும் பிரம்மாண்ட கோதண்டராமர் சிலை கிருஷ்ணகிரி தென்பெண்ணை ஆற்றை கடப்பதில் தொடர்ந்து 6ஆவது நாளாக சிக்கல் நீடிக்கிறது. பெங்களூரு அருகே ஈஜிபுரா என்ற இடத்தில் நிறுவுவதற்காக திருவண்ணாமலை மாவட்டம் கொரக்கோட்டை பகுதியில் தயாரிக்கப்பட்ட 350 டன் எடை கொண்ட பிரம்மாண்ட கோதண்டராமர் சிலை கொண்டு செல்லப்பட்டு வருகிறது. பல தடைகளை கடந்து இந்தச் சிலை மெல்ல பயணப்பட்டு தற்போது ஓசூர் அருகே சென்றுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தில் சிலையைக் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், பாலத்துக்கு இணையாக தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே மண்ணால் தற்காலிக சாலை அமைக்கும் பணி தொடங்கியது.
அதனால் பேரண்டப்பள்ளியிலேயே சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால், தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், தற்காலிக சாலை அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ஆறாவது நாளாக ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுவதால், மாற்றுப்பாதை அமைக்கும் பணி தடைப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*