Thu. Jul 18th, 2019

Tamil News

Latest Tamil News , Tamil Cinema updates, Political Tamil News, Tamil Actress HD stills, Tamil Cinema First look, Trailors, Teasers and Shooting spot updates

Upcoming Tamil Movies: நாளை வெளியாகும் படங்கள்: நட்புனா என்னானு தெரியுமா, மான்ஸ்டர், மிஸ்டர் லோக்கல்!

1 min read

சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள மிஸ்டர் லோக்கல் படம் உள்பட நாளைக்கு மான்ஸ்டர், நட்புனா என்னானு தெரியுமா ஆகிய படங்கள் வெளியாக உள்ளன.

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில், சிறிய பட்ஜெட் படங்கள் முதல் பெரிய பட்ஜெட் படங்கள் வரை திரைக்கு வந்து வெற்றி நடை போடுவது வழக்கம். இதுவே மாஸ் ஹீரோக்களின் படங்கள் என்றால், எந்த சிறிய பட்ஜெட் படமும் போட்டியில் இருக்காது. ஆனால், பண்டிகை காலங்களில் பெரும்பாலும் பெரிய ஹீரோக்களின் படங்கள் போட்டிக்கு வருவது வழக்கம். அப்படி வரும் படங்களில் அவைகளின் வசூல் தான் பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு வாரமும், வார விடுமுறையை முன்னிட்டு வெள்ளியன்று படங்களின் வெளியீடு இருக்கும். படங்களின் வருகை நாளுக்கு நாள், மாதத்திற்கு மாதம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இந்த வாரம் திரைக்கு வரும் படங்களை இங்கு பார்க்கலாம்.

மிஸ்டர் லோக்கல், மான்ஸ்டர், நட்புனா என்னானு தெரியுமா ஆகிய படங்கள் திரைக்கு வருகிறது.

மிஸ்டர் லோக்கல்

இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, யோகி பாபு ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் மிஸ்டர் லோக்கல். இப்படம் நாளைக்கு திரைக்கு வருகிறது.

மான்ஸ்டர்

இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூரியா, ப்ரியா பவானி சங்கர், கருணாகரன் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் மான்ஸ்டர். எலியை மையப்படுத்திய இப்படத்தில் எஸ்ஜே சூரியாவின் காமெடி கலாட்டா குழந்தைகளை கவரும் வகையில், இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தம்மா துண்டு எலியால் ஏற்படும் விபரீதம்: எஸ்.ஜே.சூரியாவின் காமெடி கலாட்டா மான்ஸ்…X

TN Area-wise theatre list for #MonsterFromTomorrow https://t.co/fHKqQRA1nh— Ramesh Bala (@rameshlaus) 1557985895000

நட்புனா என்னானு தெரியுமா

சிவக்குமார் இயக்கத்தில் சரவணன் மீனாட்சி புகழ் கவின், ரம்யா நம்பீசன், வெங்கடேஷ் ஹரிநாதன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் நட்புனா என்னானு தெரியுமா. இப்படம் முழுக்க முழுக்க காதல் கலந்த காமெடி படமாக உருவாகி வருகிறது. 3 நண்பர்கள் ஒரு பெண்ணின் மீது காதல் கொள்வதை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நண்பர்களின் ஆரவாரத்துடன் நாளை முதல் #NatpunaEnnanuTheriyuma #NETfromTomorrow #NETonMay17 @Actor_kaviin… https://t.co/KZSwhRnNMx— Ramesh Bala (@rameshlaus) 1557999026000

#NETfromTomorrow #NETonMay17 #NatpunaEnnanuTheriyuma வெற்றி வாகை சூட நாளை முதல் வருகிறோம் �� @Actor_kaviin… https://t.co/BL3CAGoKkM— Ramesh Bala (@rameshlaus) 1557993508000

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.