விண்ணப்பித்துவிட்டீர்களா..? வெளிநாட்டில் செவிலியர் வேலை


வெளிநாட்டில் செவிலியர் பணிக்கு விண்ணப்பிக்க நாளை வெள்ளிக்கிழமை(மே 17) கடைசி நாளாகும். இதுகுறித்து எதமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பி.எஸ்சி. நர்சிங் முடித்து 5 ஆண்டு அனுபவம் உள்ளவர்கள் 35 வயதிற்கும் உட்பட்ட ஆண், பெண் செவிலியர்களுக்கு சவுதி அரேபியாவில் பணி நியமனம் பெற அந்த நாட்டின் அமைச்சகம் வருகிற 20 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை கொச்சியில் நேர்முகத் தேர்வு நடத்துகிறது. தகுதியும் விருப்பமும் உள்ள செவிலியர்கள் தங்களது சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி, அனுபவம், பாஸ்போர்ட், ஆதார் எண் ஆகியவற்றின் நகல்கள், வெள்ளைநிற பின்னணியில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் ர்ஸ்ங்ம்ஸ்ரீப்ம்ர்ட்ள்ஹ2018ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீர்ம் என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வருகிற 17 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும், விவரங்களுக்கு 044-22505886, 22502267 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 82206-34389 என்ற செல்லிடைப் பேசி போனிலோ தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.80 ஆயிரம் சம்பளம், இலவச உணவு, இருப்பிடம் வழங்கப்படும். மேலும், 35 நாட்கள் சம்பளத்துடன் கூடிய வருடாந்திர விடுமுறை மற்றும் இதர சலுகைகளும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*