தடம்மாறிப் போன காதல் மனைவி… கள்ளக்காதலனிடம் அனுபவிக்கும் சித்ரவதை…!

திருச்சியை சேர்ந்த தம்பதி மகேஷ் – திவ்யா. இவர்கள் தங்கள் வீட்டை எதிர்த்து கடந்த 2008-ம் ஆண்டு காதல் கல்யாணம் செய்து கொண்டார்கள். கடந்த 2013-ம் ஆண்டு இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், மகேஷுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2017ம் ஆண்டு முதல் திவ்யா தனது மகனுடன் நெல்லையில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டார். மேலும் விவாகரத்தும் கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த சமயத்தில், மனைவி தன்னோடு சேர்ந்து வாழ வேண்டும் என்றும் குழந்தை அப்பாவிடம் இருக்க வேண்டும் என திருச்சி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் 2018ம் ஆண்டு மகேஷிற்கு ஆதரவாக, தம்பதி சேர்ந்து வாழ வேண்டும் என தீர்ப்பு வந்தது. அதன்படி, 2019 ஜனவரி மாதத்தில் இருந்து தனது மகனை சென்று பார்த்து வருகிறார் தந்தை மகேஷ். இந்நிலையில் இன்று நெல்லை சரணாலயத்தில் செயல்படும் “குழந்தைகள்நலகுழு”வில் மகேஷ் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் “என் மனைவி திவ்யா என்னை விட்டு தனியாக பிரிந்து வாழ்கிறார்.

எங்கள் மகன் திவ்யாவின் வளர்ப்பில் 1ம் வகுப்பு படித்து வருகிறான். போன வாரம், என் மாமியார், மைத்துனர் எனக்கு ஒரு விஷயம் சொன்னார்கள். என் மனைவி அன்சாரி என்ற வேறு ஒரு நபருடன் தகாத உறவு வைத்துள்ளார் என்றும், அவர் என் மகனை அடித்து துன்புறுத்துவதாகவும் கூறினார்கள். இதனால் என் மகன் உடம்பு முழுதும் காயங்கள் இருக்கின்றன. இது அவனது பள்ளி தலைமை ஆசிரியர் மூலமும் தெரியவந்துள்ளது. மகன் நிலை மோசமாக உள்ளது தெரிந்ததால் உடனடியாக என் மகனை மீட்டு மனைவியிடம் இருந்து பாதுகாத்து என்னுடன் அழைத்து செல்வதற்கும், என் மகனை அடித்து கொடுமைப்படுத்திய என் மனைவியின் தகாத உறவில் இருக்கும் அன்சாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.