911 க்கு கால் செய்யுங்கள்! கோஹ்லியுடன் பேசலாம்! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை அரை இறுதி போட்டியில் இந்திய அணி போராடி தோற்றது. 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் முதல் மூன்று ஆட்டக்காரர்கள் வந்த வேகத்தில் வெளியேறினர். குறிப்பாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி 1 ரன்னில் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினார். இவர் கடந்த இரண்டு உலகக்கோப்பை அரை இறுதிப்போட்டிகளிலும் இதே போன்று தான் ஒற்றை இலக்கு ரன்களில் ஆட்டமிழந்து இந்திய அணிக்கு ஏமாற்றம் அளித்தார். 2011 ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் விராட் கோஹ்லி 9 ரன்களில் ஆட்டமிழந்தார்.

2015ம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான உலகக்கோப்பை அரை இறுதி போட்டியில் விராட் கோஹ்லி 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இப்போது நடைபெற்ற நியூஸிலாந்து அணிக்கு எதிரான அரை இறுதி போட்டியிலும் 1 ரன்னில் ஆட்டமிழந்து விராட் கோஹ்லி அதிர்ச்சி அளித்தார். இவர் கடைசி மூன்று உலகக்கோப்பை அரை இறுதி போட்டிகளில் அடித்த ரன்கள் 9, 1, 1. உலக அளவில் 911 என்பது எமெர்ஜென்சி கால் (Emergency call ) நம்பர். ஆகவே ஏதாவது அவசரம் என்றால் 911 க்கு நீங்கள் டயல் செய்து நீங்கள் கோஹ்லியை தொடர்பு கொள்ளலாம் என்று நெட்டிசன்கள் கோஹ்லியை சமூக வலைத்தளங்களில் கலாய்த்து வருகின்றனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*