வனிதாவிடம் சண்டையிட்டு மல்லுக்கட்டும் தர்ஷன்…ப்ரோமோ வீடியோ வெளியீடு

சென்னை: வனிதாவிடம் மல்லுக்கட்டும் தர்ஷன் ப்ரோமோ வீடியோ இன்று வெளியாகி உள்ளது. பிக்பாஸ் வீட்டில் அனைவரையும் வம்புக்கு இழுத்து வருகிறார் நடிகை வனிதா. பிக்பாஸ் வீட்டில் அனைவரையும் சண்டை போட்டு வருகிறார் நடிகை வனிதா. அவரிடம் வாய் கொடுத்து இவரிடம் முடியாது என தப்பி சென்றவர்கள் தான் அதிகம். அந்த வகையில் தற்போது தர்ஷன் கொஞ்சம் விளையாண்டு பார்க்கிறார். பிக்பாஸ் கொடுத்த டாஸ்க் கேம் விளையாடி கொண்டிருக்கும் போது சாக்சியுடன் தேவையில்லாமல் வம்புக்கு இழுக்கும் வனிதாவை. ஹீரோ தட்டி கேட்டார். இதனால் செம்ம கடுப்பான வனிதா தர்ஷன் பக்கம் திரும்பி வெளுத்து வாங்கினார்.
தேவையில்லாமல் நீ எதுக்கு வர நான் உன்கிட்ட நான் பேசவில்லை என கத்துகிறார். பின்னர் மைக் பேக்கை தூக்கி வீசி பிக்பாசை வரசொல்லுங்கள் என்று கத்துகிறார். ஆனால் இதற்கெல்லாம் அசராமல் தர்ஷன் நீங்களே கூப்பிடுங்கள் என்று சொல்லிவிட்டு செல்கிறார்.