இந்திய அணியால் விளம்பரம் வீழ்ச்சி


லண்டன்: உலக கோப்பை தொடருக்கான பைனலுக்கு இந்திய அணி முன்னேறாத காரணத்தால், 'டிவி' விளம்பரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஐ.சி.சி., நடத்தும் தொடர்கள் என்றாலே, இந்திய ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என எந்த மண்ணில் போட்டிகள் நடந்தாலும் குவிந்துவிடுவார். 100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 'டிவி' பார்வையாளர்களும் அதிகம். இது, உலக கோப்பை தொடரை ஒளிபரப்பிய 'ஸ்டார்' சேனலுக்கு சாதகமாக அமைந்தது. லீக் போட்டிகளில் விளம்பரம் ஔிபரப்ப ஒவ்வொரு நிறுவனமும், 10 நொடிக்கு ரூ. 10 லட்சம் செலுத்தியது. எகிறிய வருமானம் இந்தியா- பாகிஸ்தான் போட்டிகளில் இந்த தொகை எகிறியது.
n 10 நொடி விளம்பரத்திற்கு ரூ. 25 லட்சமாக எகிறியது. இதில் லாபம் பார்த்த, 'ஸ்டார்' நிறுவனம், இந்தியா பைனலுக்கு முன்னேறிவிடும் என எதிர்பார்த்தது. இதன் மூலம், பைனலில் விளம்பரத்திற்கு 10 நொடிக்கு ரூ. 35 லட்சம் பெற எண்ணி இருந்தது. ஆனால், நியூசிலாந்திடம் அரையிறுதியில் இந்தியா வீழ்ந்ததால் நிலைமை தலைகீழாக மாறியது. தற்போது, இங்கிலாந்து- நியூசிலாந்து மோதல் என்பதால் மீண்டும் ரூ. 15 லட்சமாக குறைந்த போனது. 130 சதவீதம் அதிகம் 45 நாட்கள் நடந்த உலக கோப்பை தொடரில் 'ஸ்டார்' நிறுவனம் 'டிவி' ஔிபரப்பின் மூலம் ரூ. 1500 கோடி லாபம் பெற இலக்காக வைத்துள்ளது. 'ஹாட் ஸ்டார்' ஆப் மூலம், ரூ. 300 கோடி சேர்த்து மொத்தம் ரூ. 1800 கோடி வருமானத்தை பெறும் முனைப்பில் உள்ளது. இருப்பினும், ரூ. 1600 கோடியை உறுதியாக எட்டி விடும் எனத்தெரிகிறது. இது, கடந்த உலக கோப்பை தொடரை விட சுமார் 130 சதவீதம் அதிகம். ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த கடந்த தொடரில், ரூ. 700 கோடி லாபம் பெற்றிருந்தது.