ஜோலார்பேட்டை-சென்னை குடிநீர் கொண்டு வரும் பணிகளில் சற்றே தடை


வேலூர்: குடிநீர் கொண்டு வரும் பணிகளில் சற்றே தடை… ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டுவரும் பணிகளுக்கான சோதனை ஓட்டத்தில் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. சீரமைக்கும் பணி தொடர்கிறது. வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டுவரும் பணிகளில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். குழாய் சீரமைப்பு பணிகள் நிறைவடையாததால் நேற்று சோதனை ஓட்டம் நடக்குமென ஒத்திவைக்கப்பட்டது. ஜோலார்பேட்டையில் உள்ள ஒகேனக்கல் கூட்டு குடிநீர் தரைதொட்டியில் இருந்து பார்சம்பேட்டை ரயில் நிறுத்தம் வரை சுமார் மூன்றரை கிலோ மீட்டர் தூரம் வரை குழாய்கள் அமைக்கும் பணி நிறைவுற்று, வெள்ளோட்டம் நடைபெற்றது.
n திடீரென பார்சம்பேட்டை கூட்டு சாலை அருகே அமைக்கப்பட்டிருந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் சோதனை ஓட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனிடையே, வில்லிவாக்கத்திற்கு ரயில் மூலம் கொண்டு வரப்படும் தண்ணீரை பெரிய இரும்பு குழாய்கள் மூலம் கீழ்ப்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு எடுத்து செல்வதற்கு பெரிய குழாய்களுடன் இணைக்கும் பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துள்ளன. சீரமைப்பு பணிகள் நிறைவடைந்து ஓரிரு தினங்களில் சென்னைக்கு தண்ணீர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.