காதலி என நினைத்து வேறோரு பெண்ணை அறைந்த வாலிபர் போலீஸில் கைது..


கவுந்தப்பாடி அருகே தனது காதலி என நினைத்து வேறொறு பெண்ணை கன்னத்தில் அறைந்த வாலிபரை போலீஸார் கைது செய்துள்ளது. கவுந்தப்பாடி அருகே உள்ள செந்தாம்பாளையத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண் தனது மோட்டார் ஸ்கூட்டரில் விட்டிலிருந்து புறப்பட்டு கவுந்தப்பாடியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவர் பின்னால் பைக்கில் வந்த வாலிபர் அந்த பெண்ணை தாக்கி கன்னத்தில் பளார் என அறைந்துள்ளார். உடனே வாலிபர் பைக்கை எடுத்துகொண்டு ஓடினார். இந்த சம்பவம் குறித்து போலீஸாரில் அப்பெண்ணின் பெற்றோர் புகார் கொடுத்தனர். அப்புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து அந்த இளைஞனை கைது செய்தது. அவரின் பெயர் வல்லரசு எனவும், அவர் ஒரு பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வருவதாகவும் தெரியவந்தது.
n கூத்தம் பட்டியைச் சேர்ந்த வல்லரசு, ஒரு பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். அந்த பெண் அவருடைய காதலை ஏற்றுகொள்ளாத நிலையில் அந்த பெண்ணின் மேல் பெரும் கோபத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் கவுந்தப்பாடிக்கு ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த பெண்ணை தான் காதலித்த பெண் என்று நினைத்து கண்ணத்தில் அறைந்ததாக போலீஸ் விசாரனையில் தெரியவந்தது. மேலும் வல்லரசு மீது கவுந்தப்பாடி போலீஸார் வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை நீதிபதி 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.


Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *