கிளாஸ் லீடர் தேர்தல்! மாணவியிடம் தோல்வி! 8ம் வகுப்பு மாணவனின் விபரீத முடிவு! அதிர வைத்த சம்பவம்!


தெலங்கானா மாநிலத்தில் பள்ளிவகுப்புத் தலைவருக்கான தேர்தலில் தோல்வி அடைந்த மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டான். நலகொண்டாவைச் சேர்ந்த 13 வயதுச் சிறுவன் கடந்த வியாழக்கிழமை பள்ளி முடிந்து வீடு திரும்பிய நிலையில் அதன் பிறகு வெளியே சென்ற சிறுவனை அதன் பிறகு காணவில்லை. இது தொடர்பாக சிறுவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து சிறுவனை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை சித்யால், ரமணாபேட்டை இடையே ரயில்வே தண்டவாளத்தில் சிறுவனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட போது அந்தச் சிறுவன் அங்குள்ள கிருஷ்ணவேணி பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தது தெரியவந்தது.
n பள்ளி நிர்வாகம் சார்பில் வகுப்புத் தலைவருக்கான தேர்தல் நடத்தபட்ட நிலையில் சக மாணவியிடம் 6 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததும் தெரியவந்தது. எனினும் வகுப்பின் உதவித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவன் அதற்காக வகுப்புத் தோழர்களுக்கு இனிப்பு வழங்கியதாக பள்ளி சார்பில் தெரிவிக்கப்பட்து. எனினும் மாணவியிடம் தோற்றுவிட்டதாக சக மாணவர்கள் சிலர் அந்தச் சிறுவனை தொடர்ந்து கிண்டல் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்த மாணவன் மன அழுத்தத்தில் இருந்ததாக பள்ளித் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் அந்தச் சிறுவன் தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது. பள்ளியில் தேர்தல்களை நடத்தி முடிவுகளை எதிர்கொள்ளச் செய்வது சிறப்பானதாகவே இருக்கும் என்றாலும் தேர்வுகள் தேர்தல்களை எதிர்கொள்ளும் மாணவர்களின் மன நிலை அந்த நேரத்தில் மாறுபட்ட எண்ண மோதல்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் பெற்றோர், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் அவர்களுக்கு ஆதராவாகவும் வழிகாட்டியாகவும் இருந்து, கண்காணிப்பிலும் இருக்க வேண்டும் என்று உளவியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.


Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *