குற்றால சீஸன். வரிசை கட்டும் மக்கள்! ‘ஒரு காட்டு’ காட்டாத அருவிகள்!


நெல்லை மாவட்டம் திருக்குற்றாலத்தில் சீஸன் டல் அடிக்கிறது. இந்த முறை கடந்த 20 வருடங்களில் இல்லாத அளவுக்கு மழை இல்லாமல், அருவிகளில் நீர் வரத்து இன்றி பொலிவு குன்றிக் காணப் படுகிறது குற்றாலம். சீஸன் காலங்களில், பழைய குற்றால அருவியில் எப்போதுமே தண்ணீர் நன்றாக விழும். ஆனால் இம்முறை பழைய குற்றாலம் அருவி வறண்டு போய்க் காணப் படுகிறது. பிரதான அருவி, ஐந்தருவியில் ஓரளவு சுமாராக தண்ணீர் விழுகிறது. அதில் வரிசை கட்டி நின்று மக்கள் எவ்வளவு நேரமானாலும் பரவாயில்லை, குற்றால அருவியில் தலையைக் கொடுத்துவிட்டுப் போகணும் என்று குளித்து மகிழ்கிறார்கள். நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (11-07-2019) பாபநாசம் : உச்சநீர்மட்டம் : 143 அடி நீர் இருப்பு : 45.65 அடி நீர் வரத்து : 480.09 கன அடி வெளியேற்றம் : 304.75 கன அடி சேர்வலாறு : உச்ச நீர்மட்டம் : 156 அடி நீர் இருப்பு : 58.70 அடி நீர்வரத்து : Nil வெளியேற்றம் : Nil மணிமுத்தாறு : உச்ச நீர்மட்டம்: 118 அடி நீர் இருப்பு : 50.70 அடி நீர் வரத்து : 29 கனஅடி வெளியேற்றம் : Nil கன அடி
n