குட்டு அம்பலமானதால் அழுது சீன் போட்ட கவின்.. பெட்டிய கட்டப்போவதாக அனுதாபம் தேடிய அவலம்!


சென்னை: தான் ஆடிய டபுள் கேம் அம்பலமானதால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப்போவதாக சீன் போட்டு வருகிறார் கவின். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவின், காதல், கடலை என மொத்த பெயரையும் கெடுத்துக்கொண்டார். பிக்பாஸ் வீட்டில் உள்ள திருமணமாகாத பெண்களுடன் மட்டுமே தொடக்கம் முதல் நெருக்கம் காட்டி வந்தார். குறிப்பாக ஷெரின், சாக்ஷி, அபிராமி, லாஸ்லியா ஆகியோரிடம் கவின் நடந்து கொண்ட விதம் அப்பப்பா.. அவர்களை கட்டியணைப்பதும் தடவுவதுமாக இருந்தார். இதனால் சமூக வலைதளத்தில் கடும் விமர்சனத்துக்கு ஆளானார். அலர்ட்டான கவின் குறிப்பாக கவின் மதுவிடம் மட்டும் நடந்து கொண்டவிதம் பார்வையாளர்களை கடுப்பேற்றியது. கடந்த இரண்டு வாரங்களாக மதுமிதா காப்பற்றப்பட்டதால் அலர்ட்டான கவின் அவரிடம் சண்டை போடாமல் பேசி வருகிறார்.அண்ணன் என்று கூப்பிடாதே இந்நிலையில் சாக்ஷிக்கும் தனக்கும் இடையிலான காதலை லாஸ்லியாவிடம் சொல்லாமல் அவருடன் நெருங்கி பழகினார் கவின். வார்த்தைக்கு வார்த்தை உன்னை பிடிக்கும் என்றும் அண்ணன் என்று கூப்பிடாதே என்றும் கூறியும் அவர் மீதான இன்ட்ரஸ்ட்டை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார் கவின்.நெருங்கிய லாஸ்லியா சாக்ஷிக்கும் கவினுக்கும் இடையே உள்ள காதல் உறவு தெரியாமல் லாஸ்லியாவும் அவருடன் நெருங்கி பழகினார். கவினுடன் கதைக்க பிடிக்கும் என்று அனைவரின் முன்பும் கூறினார். கவின் பின்னாடியே சுற்றினார்.நான் கிளம்புகிறேன் இந்நிலையில் கவினுக்கும் சாக்ஷிக்கும் இடையிலான நெருக்கத்தை அறிந்த லாஸ்லியா நேற்றைய எபிசோடில் கவினை நறுக் நறுக்கென கேட்டார். இதனால் மனமுடைந்த கவின் பிக்பாஸிடம் நான் கிளம்புகிறேன், யாராலம் எனக்கு உதவ முடியாது, என்னை கன்ஃபெஷன் ரூமுக்கு கூப்பிடுங்கள் என்றார்.பத்து நிமிடம் இதனை பார்த்த சாக்ஷி உன்னிடம் பேச வேண்டும் என்றார். அப்போது நான் கிளம்புகிறேன் என்று அழுதபடியே கூறுகிறார். அப்போது சரி ஒரு பத்து நிமிடம் பேசிவிட்டு போ, நீ பேசும்போது நான் டைம் கொடுத்தேன் நான் பேச வேண்டும் என்று கூறும்போது நீ கேட்க மாட்டாயா என்று கேட்கிறார்.கவின் போட்ட பிட்டு தான் செய்த தவறு, தான் போட்ட ஆட்டம், தான் ஆடிய டபுள் கேம் அம்பலமானதால் பயந்த கவின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப் போவதாக கூறி வருகிறார். இவர் கேட்டவுடனே பிக்பாஸ் உடனே வெளியே அனுப்பி விடுவாரா? மற்றவர்களின் அனுதாபத்தை பெற கவின் இப்படி ஒரு பிட்டை போட்டு ஆழம் பார்த்து வருகிறார்.
n
n
n
n


Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *