நள்ளிரவில் கணவன் தூங்கிய பிறகு மகளுடன் தாய் செய்த விபரீதம்! நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்!


இளம்பெண் ஒருவர் தன் குழந்தையுடன் சேர்ந்து ரயில் தண்டவாளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது திருவாரூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் செல்வம்.இவர் பல வருடங்களுக்கு முன்னால் அதே பகுதியை சேர்ந்த கோமதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். நாகஸ்ரீ என்ற 7 வயது குழந்தையும், நவிஸ்ரீ என்ற 3 வயது குழந்தையும் ஆவர். இந்நிலையில் பல நாட்களாக செல்வமும் கோமதியும் குழந்தைகளுக்கு முன் சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டுள்ளனர். பலமுறை சண்டைகள் வெடித்து கைகலப்பு வரை சென்றுள்ளன. சில தினங்கள் முன்னர் மீண்டும் செல்வமும் கோமதியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
n வாக்குவாதம் முற்றிபோய் செல்வம் கோமதியை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் கோமதி மிகவும் மனமுடைந்து காணப்பட்டார். திடீரென்று அதிகாலையில் அனைவரும் தூங்கி கொண்டிருந்த போது கோமதி தன் இளைய மகளான நவிஸ்ரீயை அழைத்து கொண்டு திருவாரூர் ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார். சென்னை மற்றும் மன்னார்குடி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு முன் 2 பேரும் குதித்துள்ளனர். எக்ஸ்பிரஸ் வண்டி என்பதால் அவர்கள் மோதி பறந்து சென்றனர். இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அப்பகுதி காவல்துறையினர் ரயில் நிலையத்திற்கு வந்து இறந்துபோன சடலங்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 2 பேரின் தற்கொலை பற்றி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவமானது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *