நான் தமிழ் பெண் என்பதால் என்னை கொடுமை படுத்துகிறார்கள்.. என்னை காப்பாற்றுங்கள்.. நடிகை கதறல்!


பெங்களூரு: தான் தமிழ் பெண் என்பதால் தன்னை கொடுமை படுத்துவதாக நடிகை விஜயலட்சுமி கதறல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகை விஜயலட்சுமி ஃபிரன்ட்ஸ் படத்தில் நடிகர் விஜய்க்கு தங்கையாகவும் சூர்யாவுக்கு ஜோடியாகவும் நடித்தார். இதனைத் தொடர்ந்து மிலிட்டரி உள்ளிட்ட சில படங்களில் நடித்த அவர், கொஞ்சநாள் சினிமாவில் தலைக்காட்டாமல் இருந்தார். பின்னர் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதைத்தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் நடிகர் ஆர்யாவுக்கு அண்ணியாக நடித்தார். அங்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் கன்னடத்திற்கு சென்றார். அங்கும் அவருக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை.போட்டோக்கள் வெளியீடு இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக நடிகை விஜயலட்சுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது போன்ற போட்டோக்களும் வெளியானது.நடிகை கதறல் வீடியோ இந்நிலையில் நடிகை விஜயலட்சுமி கதறல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நான் நடிகை விஜயலட்சுமி. பிரெண்ட்ஸ் படத்தில் நடித்திருப்பேன். பெங்களூருவில் இருந்து இந்த வீடியோவை வெளியிடுகிறேன்.கன்னடத்தில் 2 படங்கள் ஆறு மாதங்களுக்கு முன்பு கொஞ்சம் சீரியஸாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன் என்ற செய்தி தெரிந்திருக்கும். தமிழில் சினிமா வாய்ப்புகள் குறைந்ததால், பெங்களூரு வந்தேன். இங்கு வந்து இரண்டு படங்களில் நடித்தேன்.உதவி கிடைக்கவில்லை இதனிடையே எனது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதியானேன். மருத்துவ செலவுக்கு பணமில்லாததால் கன்னட நடிகர் சங்கத்துக்கு தகவல் தெரிவித்தேன். எந்த உதவியும் கிடைக்கவில்லை.நடிகர் சுதீப் உதவி இதைத்தொடர்ந்து மீடியாவுக்கு தகவல் தெரிவித்தேன். இதனையறிந்த நடிகர் சுதீப் எனக்கு உதவி செய்தார். உடல்நிலை மேலும் மோசமானதால் வேறு ஒரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டேன். அப்போது கன்னட நடிகர் ரவி பிரகாஷ் எனக்கு உதவி செய்தார்.தவறான தகவல் எனக்கு உதவி செய்ததை காரணம் காட்டி என்னை டார்ச்சர் செய்தார். இதனால் எனக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு அவரை தொந்தரவு செய்யக்கூடாது என கூறினர். இதனால் என்னை பற்றி தவறான தகவல்களை பரப்பி வருகிறார்.கன்னடத்தில் எழுதி கொண்டுவா தற்போது இங்கு தங்குவதற்கு வீடு கூட இல்லை, பிரன்ட் வீட்டில் குடும்பத்துடன் தங்கியிருக்கிறேன். என்ன செய்வது என்று புரியவில்லை. என்ன உதவி கேட்டாலும் தமிழ் பெண் எனக்கூறி கொடுமைப்படுத்துகிறார்கள். காவல் நிலையத்தில் புகார் அளித்தால் கூட கன்னடத்தில் எழுதி கொண்டுவா என்கின்றனர்.ஏதாவது உதவி செய்யுங்கள் எனது உடல்நிலை மீண்டும் மோசமடைவதற்குள் எனக்கு ஏதாவது உதவி செய்யுங்கள். இங்கு நான் அனுபவிக்கும் துன்பத்தை தமிழ் திரையுலகுக்கும் தமிழ் மக்களுக்கும் தெரியபடுத்த வேண்டும் என்பதற்காவே இந்த வீடியோவை வெளியிடுகிறேன். எனக்கு தயவு செய்து உதவி செய்யுங்கள் என கதறியுள்ளார் விஜயலட்சுமி.
n
n
n
n

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*