ஓடும் விமானத்தில் தவறாக நடந்து கொண்ட பெண்ணிற்கு 70 லட்சம் அபராதம்! என்ன நடந்தது தெரியுமா?


பிரிட்டனில் இருந்து துருக்கிக்கு சென்று கொண்டிருந்த ஜெட்2 விமானத்தில் பயணம் செய்த இளம்பெண் ஒருவர் தகாத முறையில் செயல்பட்டதால் அவருக்கு 70 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தன்று ஜெட்2 விமானத்தில் தனது வயதான பாட்டியுடன் பயணம் செய்துள்ளார் 25 வயது இளம்பெண் க்ளோ ஹெயின்ஸ். விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த போது இருக்கையில் இருந்து எழுந்த அந்த பெண் திடீரென சத்தம் போட்டுகொண்டே விமானத்தின் கதவை நோக்கி ஓடியுள்ளார். அவர் கதவை திறக்கப் போவதை பார்த்த விமான ஊழியர்கள் விரைந்து சென்று அந்த பெண்னை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
n ஆனால் அந்த பெண் விடுவதாயில்லை. விமான ஊழியர்களை தகாத வார்த்தைகளால் திட்டியவாறே கூச்சலிட்டுள்ளார். அவரது இந்த நடவடிக்கையால் விமானத்தில் இருந்த பயணிகள் மிகவும் அச்சமடைந்துள்ளனர். விமானத்தை கடத்தவே இந்த பெண் இவ்வாறு செய்கிறார் என்ற அச்சம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக பாதகாப்பு படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு பறக்கும் படையினர் 2 போர் விமானங்களில் வந்து ஜெட்2 விமானத்தை பத்திரமாக தரையிறக்கியுள்ளனர். பின்னர் அந்த பெண்ணை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அந்த பெண்ணின் நடவடிக்கைக்கு பின்னால் எதுவும் சதி திட்டம் இல்லை என்பதை கண்டறிந்தனர் போலீசார். இருப்பினும் மற்ற பயணிகளை அச்சுறுத்தியதற்காகவும், அன்றைக்கு பல செலவுகளுக்கு காரணமானதாலும் அந்த பெண்ணிற்கு 10,5000 டாலர் அபராதம் விதித்துள்ளனர்.


Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *