சண்டைல உடைஞ்சது சாண்டியோட மண்டை- பிக்பாஸ் சீசன் 3

இந்த சீசனுக்கான பிக்பாஸ் ஆந்தம் பாடலை சாண்டி உள்ளிட்ட மற்ற ஹவுஸ்மேட்ஸ் சேர்ந்து உருவாக்கியுள்ளனர். இதுவரை பிக்பாஸ் வீட்டுக்குள் நடைபெற்ற சண்டை மற்றும் சச்சரவுக்களை வைத்து அந்த ஏந்தம் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் சீசன் 3-க்கு ஆந்தம் உருவாக்கிய சாண்டி
பிக்பாஸ் சீசன் 3 தொடங்கியதில் இருந்து, சுவாரஸ்யமான தன்னுடைய நடவடிக்கைகள் மூலம் பார்வையாளர்களை ஈர்த்து வரும் போட்டியாளராக இருக்கிறார் சாண்டி. நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதல், அந்த தினத்தில் நடந்த நிகழ்வுகளை கோர்த்து பிரபலமான மெட்டில் இசையமைத்து பாடுவது அவர் வழக்கம்.

அவருடன் சேர்ந்து கவின் மற்றும் தர்ஷன் இணைந்து பாடுவது வழக்கம். இதுபோல பாடி போட்டியாளர்களை பகுடி செய்வது, பிக்பாஸை கேளி செய்வது போன்றவற்றை அவர்கள் அரங்கெற்றி வருகின்றனர். இதற்கு பிக்பாஸ் தொலைக்காட்சி பார்வையாளர்களிடமும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

அந்த வகையில் இந்த சீசனுக்கான பிக்பாஸ் அந்தம் பாடலை, சாண்டி உள்ளிட்ட குழுவினர் அரங்கேற்றியுள்ளனர். இதுதொடர்பான ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அது பார்வையாளர்களிடமும் வரவேற்பு பெற்றுள்ளது.

முன்னதாக வெளியிடப்பட்ட இரண்டு ப்ரோமோவில், இதுவரை பிக்பாஸ் வீட்டில் அமைதி காத்து வந்த சரவணன், மற்ற போட்டியாளர்களிடம் சண்டை போடுவது போன்ற ப்ரோமோ வெளிவந்துள்ளது. ஆவேசமாக அவர் பேசுவதும், அதற்கு போட்டியாளர்கள் அதிருப்தி தெரிவிப்பது போன்று காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

அதேபோல, டாஸ்க் குறித்து பிக்பாஸ் போட்டியாளர்கள் உணவுக் கூடத்தில் உட்கார்ந்து விவாதித்து கொண்டிருந்தனர். அப்போது, எழுந்த பிரச்னையில் லோஸ்லியாவை அனைவரும் குற்றஞ்சாட்டுக்கின்றனர். அதனால் மனமுடைந்து வெளியேறிவிடுகிறார். பிறகு கவின் சென்று சமாதானம் செய்கிறார். எனினும், அவர் சமாதானம் ஆகவில்லை.

இதனால் இன்றைய நிகழ்ச்சி பரபரப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.