ஸ்டுபிட்.. இடியட்.. நேத்து முளைச்சவன் நீ.. 2 பேர் காண்ட்ரக்டும் ஒன்னா? தர்ஷனை கேவலமாக பேசிய வனிதா!


சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் வனிதா விஜயக்குமார் தர்ஷனிடம் பேசிய விதமும் பிக்பாஸ் வீட்டில் நடந்து கொண்ட விதமும் பார்வையாளர்களை மிரள வைத்து விட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நாள்முதல் ஓவர் ஆட்டம் போட்டு வருகிறார். பிக்பாஸ் வீட்டில் கேட்க ஆளில்லை. வனிதாவின் வாயை கண்டே மிரண்டு ஓடுகின்றனர் ஹவுஸ்மேட்ஸ்கள். ஆனால் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களில் தர்ஷன் மட்டும் தான் வனிதாவுக்கு அவ்வப்போது பதிலடி கொடுத்து வருகிறார். இதனால் தர்ஷன் மீது செம காண்டில் உள்ளார் வனிதா. இந்நிலையில் நேற்று வெளியான புரமோக்களில் தர்ஷன் வனிதாவை வாங்கு வாங்கென்று வாங்குவது போல் காட்டப்பட்டது.
n மேலும் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் வனிதாவுக்கு எதிராக திரும்பியதாக காட்டப்பட்டது. இதனால் எபிசோடை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்தது. நேற்றைய எபிசோடில் வனிதா தர்ஷனை தரக்குறைவாக பேசினார். அதாவது வீட்டின் கேப்டனுக்கான போட்டியை நடத்தினார் பிக்பாஸ். இந்தப்போட்டியில் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கில் சிறப்பாக விளையாடிய மோகன் வைத்யா, வனிதா, சாக்ஷி ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த போட்டியில் முதலில் மோகன் வைத்யா தோற்றார். இதைத்தொடர்ந்து போட்டி சாக்ஷிக்கும் வனிதாவுக்கும் இடையே நடைபெற்றது. அப்போது வனிதாவால் ஓட முடியவில்லை. இதனால் போட்டியின் ரூல்ஸ் தவறு என கூறி இந்த விளையாட்டை தொடர முடியாது ரூல்ஸை மாற்ற வேண்டும் என்றார். இதனால் கோபமடைந்த தர்ஷன், உங்களுக்கு ஏற்றது போல ரூல்ஸை மாற்றிக்கொள்வீர்களா? கேம் தொடங்கும் போதே ரூல்ஸை மாற்றியிருக்க வேண்டியதுதானே பாதி கேமில் மாற்றுவீர்களா என வனிதாவிடம் வாதம் செய்தார். தன்னை யாரும் எதிர்த்து பேசக்கூடாது என்பதில் உறுதியாக உள்ள வனிதா தர்ஷனிடம் பதிலுக்கு பதில் சண்டை போட்டார். கொஞ்சமும் மரியாதை கொடுக்காமல் தர்ஷனை லெப்ட் அன்ட் ரைட் வாங்கினார். நீ தேவையில்லாமல் என்னிடம் பேசாதே, நீ இந்த போட்டியிலேயே இல்லை நீ எப்படி பேசலாம் என கேட்டு தர்ஷனை கண்டமேனிக்கு பேசினார். நீங்கள் உங்கள் ஒபினியனை சொல்லும் போது நான் என் ஒபினியனை சொல்லக்கூடாதா என கேட்டார் தர்ஷன். உன் ஒபினியனை வேறு எங்காவது போய் சொல் என்ற வனிதா, அம்மா அப்பா என அனைவரையும் இழுத்து பேசினார். அதற்கு எல்லோரும் காண்ட்ராக்ட் பேசி தான் வந்துள்ளோம் யாரும் விளையாடமால் இருக்க முடியாது என நேற்று பேசினீர்களே என்று கேட்டு நோஸ் கட் கொடுத்தார் தர்ஷன். இதனை கொஞ்சமும் எதிர்பாராத வனிதா, உன் காண்ட்ராக்ட்டும் என் காண்ட்ராக்ட்டும் ஒன்றா? நீ நேற்று முளைத்தவன், என்னுடன் கம்பேர் செய்கிறாயா என்று கேட்டு ஆத்திரத்தில் குதித்தார். அதோடு நிறுத்திகொள்ளாமல் தர்ஷனை, இடியட், நான்சென்ஸ், ஸ்டுபிட் என்றெல்லாம் ஆங்கிலத்தில் தரக்குறைவாக பேசினார். அதே வேகத்தில் மைக்கை கழட்டி போட்ட வனிதா, அடிப்படை மரியாதை கூட இல்லாத இந்த இடத்தில் என்னால் இருக்க முடியாது. பிக்பாஸ் என்னை அழைத்து பேச வேண்டும் எனக் கூறி அடம் பிடித்தார். மேலும் இந்த பிரச்சனைக்கு காரணம் அபிராமிதான் என்று கூறி அவர் மீதும் பாய்ந்தார். பின்னர் காத்திருந்து காத்திருந்து பார்த்த வனிதா, பிக்பாஸ் அழைக்காததால் தானே மைக்கை எடுத்து மாட்டிக்கொண்டு மதுவிடம் பஞ்சாயத்து பேசினார். பின்னர் தர்ஷனுடன் சமரசம் பேசி கை கொடுத்துக்கொண்டார். ஆனாலும் நேற்றைய எபிசோடில் வனிதா ஆடிய ஆட்டமும் பேசிய பேச்சும் ஓவரோ ஓவர். தர்ஷனும் வனிதாவும் மாறி மாறி போட்டுக்கொண்ட சண்டையால் பார்வையாளர்கள் மிரண்டு போயினர்.