‘தூத்துக்குடியில் ரூ.634 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலை


சென்னை: ''துாத்துக்குடி மாவட்டம், முல்லக்காடு கிராமத்தில், 634 கோடி ரூபாய் மதிப்பில், கடல் நீரை குடிநீராக்கும் ஆலை அமைக்கப்படும்,'' என, முதல்வர், இ.பி.எஸ்., அறிவித்தார்.சட்டசபையில், 110 விதியின் கீழ், தொழில் துறையில், முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகள்:* உலகெங்கும், 'முதலீட்டு துாதுவர்களை' உருவாக்கி, தமிழகத்தில் முதலீடு செய்வது தொடர்பாக, விழிப்புணர்வு ஏற்படுத்தவும், முதலீடுகளை ஈர்க்கவும், 'யாதும் ஊரே' என்ற தனி சிறப்பு பிரிவு, 60 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்படும்* தமிழகத்தில் முதலீடு செய்ய வரும், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு, உரிய வழிகாட்டுதல்களை வழங்க, ஜப்பான், தென் கொரியா, அமெரிக்கா, சீனா, தைவான், பிரான்ஸ், இஸ்ரேல், ஜெர்மனி நாடுகளுக்கென, தனித்தனியே சிறப்பு பிரிவுகள் உருவாக்கப்படும்.
n டில்லியில் உள்ள, தமிழ்நாடு இல்லத்தில், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின், புதிய பிரிவு துவக்கப்படும்* 'தொழில் வளர் தமிழகம்' என்ற பெயரில், புதிய அடையாள முத்திரையுடன், கருத்தரங்குகள், தகவல் பரிமாற்றங்கள் போன்றவை, உள்நாட்டிலும், வெளிநாட்டிலும், ஆண்டு தோறும், 10 கோடி ரூபாய் செலவில் நடத்தப்படும்*தொழில் முதலீட்டாளர்களின் தேவைக்கேற்ப, 20 ஏக்கர் அல்லது அதற்கு மேல் நிலம் அளிக்க விரும்பும், தனியார் நில உரிமையாளர்களுடன், தொழில் முனைவோர்களை இணைக்க, 1 கோடி ரூபாய் மதிப்பில், ஒரு வலைதளம் உருவாக்கப்படும்*தொழில் நிறுவனங்களுக்கான குறைகளை தீர்வு காண, 'தொழில் தோழன்' என்ற, இணையவழி குறைதீர் மையம், 50 லட்சம்ரூபாயில் செயல்படுத்தப்படும். இவற்றில் தரப்படும் புகார்கள், அதிகபட்சமாக, நான்கு வாரங்களுக்குள் தீர்வு காணப்படும்* துாத்துக்குடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அமைந்துள்ள, தொழிற்சாலைகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக, முல்லக்காடு கிராமத்தில், 634 கோடி ரூபாயில், தினமும், 6 கோடி லிட்டர் தண்ணீர் கொள்திறன் உடைய, கடல் நீரை குடிநீராக்கும் ஆலை அமைக்கப்படும்* காஞ்சிபுரம் மாவட்டம், வல்லம் – வடகால்; ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட் பூங்காக்களில், அனைத்து வசதிகளுடன் கூடிய, தொழிற்கூட கட்டடங்கள், தலா, 50 கோடி ரூபாய் மதிப்பில் ஏற்படுத்தப்படும்வல்லம் – வடகால் மற்றும் ராணிப்பேட்டை தொழில் பூங்காக்களில், 50 கோடி ரூபாய் மதிப்பில், குடியிருப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்*சிப்காட் சிறுசேரி தகவல் தொழில்நுட்ப பூங்காவில், 40 கோடி ரூபாயில், வணிக வசதிகள் மையம், 50 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டப்படும்* தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களையும், தொழில் மயமாக்க வசதியாக, குறைந்தபட்சம், 100 ஏக்கர் அல்லது அதற்கும் மேலாக நிலம் வைத்துள்ள, தனியார் நில உரிமையாளர்களுடன் இணைந்து, கூட்டாண்மை முறையில், தொழில் பூங்காக்களை, சிப்காட் நிறுவனம் உருவாக்கும்* குறு, சிறு நிறுவனங்கள், தங்கள் உற்பத்தி திறனை மேம்படுத்தவும், தொழில்களை விரிவுப் படுத்தவும், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம், தற்போது வழங்கும், 3 சதவீத வட்டி மானியம், 6 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்* கோவையில், 9 ஏக்கர் நிலத்தில், 200 கோடி ரூபாயில், தொழில்நுட்ப வளாகம் கட்டப்படும்* காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் வான்வெளி மற்றும் பாதுகாப்பு பூங்காவில் அமைக்கப் பட உள்ள, உயர் கணினி மற்றும் பொறியியல் வடிவமைப்பு மையத்தில், புதுமை கண்டுபிடிப்பு கள் மற்றும் தொழில் முனைவோருக்கான சிறப்பு மையம், 100 கோடி ரூபாய் மதிப்பில் நிறுவப்படும்.இவ்வாறு, முதல்வர் அறிவித்தார்.

READ  சீரியல் நடிகை ஆல்யா மானசாவிற்கு நடந்த ஸ்பெஷல் விஷயம்!