`தோட்டத்துக்குள் நுழைய முடியவில்லை!’ – 400 ஏக்கர் நிலத்தை வனத்துறையிடம் ஒப்படைத்த டேன் டீ #TANTEA


இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் 1975-ம் ஆண்டு தமிழக அரசு சார்பில் TANTEA உருவாக்கப்பட்டது. நீலகிரியில் தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழக தோட்டங்கள் கூடலூர் அருகேயுள்ள பாண்டியார், நெல்லியாளம், சேரங்கோடு, சேரம்பாடி, குன்னூர் மற்றும் கோத்தகிரி போன்ற பகுதிகளில் உருவாக்கப்பட்டது.தேயிலை தோட்டத்தில் உலவும் காட்டு யானை சுமார் 5,000 ஹெக்டர் பரப்பளவில் தேயிலைத் தோட்டங்கள் உருவாக்கப்பட்டதில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் சேர்ந்தனர்.
n தேயிலை விலை உச்சத்தில் இருந்த சமயத்தில் குடியிருப்பு, ஊதியம், போனஸ் என அனைத்துச் சலுகைகளையும் வழங்கியதுஆனால், பசுந்தேயிலைக்கு விலை வீழ்ச்சி ஏற்படத் தொடங்கிய பின், இந்த டேன் டீ எஸ்டேட்டுகளும் நஷ்டத்துக்குத் தள்ளப்பட்டன. 10,000 பேர் பணியாற்றி வந்த டேன் டீயில் தற்போது 4,000 தொழிலாளர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். தொழிலாளர்கள் பற்றாக்குறை மற்றும் வன விலங்குகளின் நடமாட்டம் காரணமாக வனங்களை ஒட்டிய பகுதிகளில் உள்ள சுமார் 400 ஏக்கருக்கு மேல் உள்ள தேயிலைத் தோட்டங்களுக்குள் சென்று தொழிலாளர்கள் தேயிலை பறிக்க முடியாத நிலை ஏற்பட்டது.தேயிலை தோட்டத்தில் உலவும் காட்டு யானைமேலும், அந்தத் தேயிலைத் தோட்டங்களும் தற்போது வனமாக மாறி வருகிறது. இந்த நிலையில், வனங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்கள், சதுப்பு நிலம், தேயிலைச் செடிகள் அல்லாத வெற்று நிலம் என மொத்தம் 276 ஹெக்டர் (சுமார் 400 ஏக்கர்) நிலம் வனத்துறையிடம் தமிழ்நாடு தேயிலைத் தோட்டக்கழகம் ஒப்படைக்க முடிவு செய்தது. இதற்கான நடைமுறைகள் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வந்தது. இதற்கான அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.இது குறித்து டேன் டீ மேலாண்மை இயக்குநர் சீனிவாசராவ் ரெட்டி கூறுகையில், “தமிழ்நாடு தேயிலைத் தோட்டக்கழகத்தில் உபரியாக உள்ள 276 ஹெக்டர் நிலம் மட்டுமே தற்போது வனத்துறையிடம் ஒப்படைக்கப்படுகிறது tantea மேலாண்மை இயக்கநர் சீனிவாசராவ் இந்த நிலம் வழங்கப்படுவதால், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக்கழகத்துக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. வனங்களை ஒட்டியுள்ள பகுதிகள், தேயிலைச் செடிகள் இல்லாமல் வெற்று நிலமாக உள்ள இடங்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. இதற்கான அளவைப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன" என்றார்.


Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *