யார் சொல்லி வனிதா இப்படி ஆடுகிறார்?: ரகசியம் சொன்ன பாத்திமா பாபு


சென்னை: பிக் பாஸ் 3 வீட்டில் வனிதா ஏன் மோசமாக நடந்து கொள்கிறார் என்று பாத்திமா பாபு தெரிவித்துள்ளார். பிக் பாஸ் 3 வீட்டில் இருப்பவர்களில் அதிகமாக ஃபோகஸில் இருப்பவர் வனிதா விஜயகுமார் தான். இது என்ன வனிதா வீடா, பிக் பாஸ் வீடா என்று சந்கேம் ஏற்படும் அளவுக்கு அவர் ஆதிக்கம் உள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் 3 வீட்டில் இருந்து முதல் ஆளாக வெளியேற்றப்பட்ட பாத்திமா பாபு போட்டியாளர்கள் பற்றி சில சுவாரஸ்யங்களை தெரிவித்துள்ளார். பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது, கோபம் பாத்திமா பாபு பிக் பாஸ் வீட்டில் என் நிஜ குணத்தை மக்கள் பார்த்துள்ளனர்.
n ஒருவரை புரிந்து கொள்ள 2 வாரம் போதாது. பிக் பாஸ் வீட்டில் நான் என் கோபத்தை காட்டவே இல்லை. நான் கோபப்பட்டால் பயங்கரமாக கத்துவேன். இதெல்லாம் பிக் பாஸ் வீட்டில் நான் செய்யவில்லை. ஏனென்றால் நான் கோபப்படும்படி எதுவும் நடக்கவில்லை. வாழ்க்கை வனிதா வனிதாவுக்கு வாழ்க்கை பற்றிய புரிதல் குறைவு. ஆனால் தனக்கு அனைத்தும் தெரியும் என்று நினைப்பதால் பிரச்சனை ஏற்படுகிறது. அவரை நினைத்து வருத்தப்படுகிறேன். பிற மொழி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவரின் நண்பர்கள் இப்படித் தான் நடந்து கொள்ள வேண்டும் என்று வனிதாவுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர் என்று நினைக்கிறேன். நண்பர்கள் அறிவுரை அனைவரின் கவனத்தையும் ஈர்க்க வேண்டும். அப்பொழுது தான் உன்னை அதிக நேரம் காட்டுவார்கள் என்று அந்த நண்பர்கள் வனிதாவிடம் சொல்லியிருக்கிறார்கள் போன்று. கேமராவுக்கு பின்னால் அவரிடம் நன்றாக பழகினால் அவரும் நல்லபடியாக பேசுகிறார். ஆனால் கவனத்தை ஈர்க்க கேமராவுக்கு முன்பு வேறு மாதிரி ஆகிவிடுகிறார். கவனத்தை ஈர்க்கவே அவர் கிசுகிசுக்களை உருவாக்குகிறார். புறம் பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறார். அதற்கு நாம் ஒன்றும் செய்ய முடியாது. போலி மீரா மிதுன் மீரா ஒரு நாள் காலை தியானம் செய்தார். அது எந்த வகையான தியானம் என்று சேரன் கேட்டார். அதற்கு அவர் நான் பலவகை தியானம் செய்வேன், சத்குருவுடன் சேர்ந்து தியானம் செய்திருக்கிறேன் என்றார். சத்குருவுடன் சேர்ந்து தியானம் செய்ததாக அவர் பொய் சொல்லியுள்ளார். அவர் தன்னை பற்றி அனைவரும் பெருமையாக நினைக்க வேண்டும் என்று பொய் சொல்கிறார். அவர் தன் புகழ்பாடி பெருமைப்படுவதால் மற்ற போட்டியாளர்களுக்கு அவரை பிடிக்கவில்லை என்கிறார் பாத்திமா பாபு.