பிக்பாஸில் இருந்து வெளியேறும் சாக்சி!

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படும் படலம் நடைபெற்று வரும் நிலையில் இந்த வாரம் சாக்சி, அபிராமி மற்றும் லாஸ்லியா ஆகிய மூவர் எவிக்சன் பட்டியலில் இருந்தனர். இந்த நிலையில் சற்றுமுன் நமக்கு கிடைத்த பிரத்யேக தகவலின்படி இந்த வாரம் வெளியேறும் நபர் குறித்து தெரிய வந்துள்ளது.

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவது சாக்சி அகர்வால். இவர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னரே வெளியேறியிருக்க வேண்டியவர். ஆனால் மீராமிதுன் திடீரென சேரன் மீது சுமத்திய குற்றச்சாட்டால் கடந்த வாரத்திற்கு முந்தைய வாரம் தப்பித்தார். கடந்த வாரம் ரேஷ்மா மிகக்குறுகிய வித்தியாசத்தில் பின் தங்கியதால் சாக்சி மீண்டும் தப்பித்தார். ஆனால் இந்த வாரம் லாஸ்லியா மற்றும் அபிராமியுடன் போட்டியிட்டதால் இருவரை ஒப்பிடும்போது மிகக்குறைந்த வாக்குகள் பெற்றதால் சாக்சி வெளியேறுகிறார்.

READ  கவினுக்கு லிஃப்ட்டில் திடீர்னு தோன்றிய தத்துவம் : என்னன்னு தெரியுமா?