பெண்களிடம் தவறாக நடந்து கொண்ட சரவணன் பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டார்!

அதையும் தாண்டி புனிதமான சரவணன் பிக்பாஸில் இருந்து திடீர் வெளியேற்றம்
நேற்றைய எபிசோட்டின் தொடர்ச்சியாக இன்றைய நிகழ்ச்சி தொடங்கியது. ரேஷ்மாவின் வெளியேற்றம் குறித்து அபிராமி, சாக்‌ஷி, முகின், ஷெரீன் ஆகியோர் பேசி கொண்டிருந்தார். அப்போது, முகினுடன் சாக்‌ஷி பேசுவதால் அபிராமிக்கு கோபம் ஏற்படுகிறதா என்று கமல்ஹாசன் கேட்டதை சாக்‌ஷி, அபிராமியிடம் கேட்டார். அதற்கு அபிராமி இப்போது இதை பேச வேண்டாம் என்று கோபமாக கூறியவாறு உள்ளே சென்றுவிட்டார்.

சந்திப்புக் கூடத்தில் லோஸ்லியா தோளில் சாய்ந்தவாறு சாக்‌ஷி கேட்ட கேள்வியை நினைத்து அழத் தொடங்கினார் அபிராமி. லோஸ்லியா தேற்றியும் அவர் கேட்கவில்லை. பிறகு படுக்கை அறைக்கு சென்றும் அழுதார் அபிராமி. இதை கவனித்த உடன் முகின் உள்ளே வந்தார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையில் நடந்த உரையாடலில் முகின் கோபப்பட்டு கட்டிலின் ஒரு பகுதியை உடைத்துவிட்டார் அவர்.

இதை கவனித்த மற்ற போட்டியாளர்கள் முகினை அழைத்துச் சென்று சமாதானம் செய்தனர். அதை தொடர்ந்து, அபிராமியை சமாதானப்படுத்தினார் முகின். இவர்களுடைய நடவடிக்கை மதுமிதாவை மிகவும் கோபப்படுத்தியது. சேரனும், சரவணன்னும் இதுதொடர்பாக அதிருப்தி தெரிவித்தனர்.

அதை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டின் புதிய பொழுது தொடங்கியது. உடனே நாமினேஷனுக்கான செயல்பாடுகளும் துவங்கியது. அதில் அபிராமி, சாக்‌ஷி, சரவணன் ஆகியோருடன் முதன்முறையாக லோஸ்லியாவும் நாமினேஷனுக்காக தேர்வு செய்யப்பட்டனர். அது முடிந்ததும் கடந்த வாரம் தன்னுடைய நடவடிக்கைக்கு மன்னிப்பு கோரினார் லோஸ்லியா.

பிறகு போட்டியாளர்களுக்கு டாஸ்க் வழங்கப்பட்டது. ஹவுஸ்மேஸ் மூன்று அணிகளாக பிரிந்து ”ஏர்டெல் தாங்கஸ்” டாஸ்க்கை மேற்கொண்டனர். குறைந்த நேரத்தில் டாஸ்க்கை செய்து முடித்த தர்ஷன், அபிராமி மற்றும் லோஸ்லியா வெற்றி பெற்றனர். அவர்களுக்கு பரிசாக பிளாக் ஃபாரஸ்ட் கேக் வழங்கப்பட்டது.

அதை தொடர்ந்து சரவணன் கன்ஃபெஷன் ரூமுக்கு அழைக்கப்பட்டார். அதில் அவருடன் பேசிய பிக்பாஸ், மீரா மற்றும் சேரன் விவகாரம் தொடர்பாக பேசும் போது கல்லூரி காலங்களில் பெண்களை உரசவே சென்றதாக கூறியிருந்தீர்கள். பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதற்காகவும், அதை தேசிய தொலைக்காட்சியில் கூறியதற்காகவும் நிகழ்ச்சியில் இருந்து உடனே வெளியேற்றப்படுகீர்கள் என்று அறிவித்தார் பிக்பாஸ்.

Bigg Boss Episode 43: கல்லூரி காலத்தில் செய்த தவறுக்காக பிக்பாஸ் வீட்டில் தண்டனை பெற்ற சரவணன்..!


Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *