ஐடி ரெய்டுக்கு பதிலடி.. பிரேமலதாவின் சொந்த ஊரிலேயே திமுக செய்த சம்பவம்.. ஆம்பூரில் திருப்பம்

வேலூரில் திமுக திடீர் என்று முன்னிலை வகிப்பதற்கு அந்த கட்சி ஆம்பூரில் பெற்ற வாக்குகளும் முக்கியமான காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. வேலூர்: வேலூரில் திமுக திடீர் என்று முன்னிலை வகிப்பதற்கு அந்த கட்சி ஆம்பூரில் பெற்ற வாக்குகளும் முக்கியமான காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. தேமுதிக பொருளாளர் பிரேமலதாவின் சொந்த ஊர்தான் ஆம்பூர் என்பது குறிப்பிடத்தக்கது. வேலூர் லோக்சபா தேர்தலில் திமுக வெற்றியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி சண்முகம் வேலூரில் தற்போது பின்னடைவை சந்தித்துள்ளார். அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி சண்முகம் 299368 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 315448 வாக்குகள் பெற்றுள்ளார். எப்படி வேலூர் லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆம்பூர் மக்கள்தான் அதிகம் வாக்களித்து இருக்கிறார்கள். ஆம்பூரில் திமுக கூட்டணி எடுத்த அதிக வாக்குகள்தான் கடைசி நேரத்தில் அதிமுகவை பின்னடைவை நோக்கி தள்ள வைத்துள்ளது. ஆம்பூர் மக்கள் திமுகவிற்கு மொத்தமாக வாக்குகளை வாரி வழங்கி இருக்கிறார்கள்.என்ன காரணம் ஆம்பூர் என்பது தேமுதிக பொருளாளர் பிரேமலதாவின் சொந்த ஊர் ஆகும். பிரேமலதாவிற்கு அந்த ஊரில் பெரிய அளவில் மதிப்பும் வரவேற்பும் இருக்கிறது. அதேபோல் அரசியல் ரீதியாக வேலூர் தேமுதிகவுக்கு கொஞ்சம் ஸ்டிராங் சோன்.செல்வாக்கு உள்ளது அதுமட்டுமில்லாமல் சமுதாய ரீதியாகவும் பிரேமலதாவிற்கு ஆம்பூரில் நல்ல பலம் இருக்கிறது. இதைத்தான் அதிமுக மிக சரியாக பயன்படுத்திக் கொள்ள நினைத்தது. ஆம்பூரில் அதிமுக சார்பாக யாருமே தேர்தலில் சரியாக பிரச்சாரம் செய்யவில்லை. அங்கு பிரேமலதாதான் முழுக்க முழுக்க கவனம் செலுத்தினார்.மாஸ் இதனால் ஆம்பூரில் தேமுதிகவின் பிரேமலதா களமிறங்கி பிரச்சாரம் செய்து வந்தார். ஆம்பூர் பொறுப்பு மொத்தமும் பிரேமலதாவிடம் கொடுக்கப்பட்டது. இதனால் அவர் அங்கு மிக தீவிரமாக பிரச்சாரம் செய்தார். ஆம்பூரில் தெருத்தெருவாக பிரேமலதா பிரச்சாரம் செய்தார். ஆனால் இது எதுவுமே அதிமுகவிற்கு பலன் அளிக்கவில்லை.வாய்ப்பு லோக்சபா தேர்தல் கூட்டணியின் போது திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் பிரேமலதா இடையே பெரிய மோதல் வந்தது. அப்போதே பிரேமலதா, துரைமுருகன் வீட்டில் நடந்த ஐடி ரெய்டு என்பது, தன்னை பகைத்துக் கொண்டதால் நடந்தது. தேமுதிகவை பகைத்தால் இப்படித்தான் என்று கூறினார்.ஆனால் தற்போது தற்போது பிரேமலதா ஊரிலேயே துரைமுருகன் மகன் அதிக வாக்குகளை பெற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.அதுவும் ஆம்பூர்தான் அதிமுகவின் பின்னடைவிற்கு முக்கிய காரணமாக மாறி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *