பிக்பாஸில் எனது ஓட்டு இவருக்கு தான்! வெளியேறிய சாக்‌ஷி கூறிய உண்மை!

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து கடந்த வாரம் வெளியேற்றப்பட்டவர் நடிகை சாக்‌ஷி. இவர், பிக்பாஸ் வீட்டில் சரியாக விளையாடி கொண்டிருந்த சமயத்தில் கவின் மீதான காதல் பிரச்சனையால் மக்களின் வெறுப்பை சம்பாதித்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

இந்நிலையில், சாக்‌ஷியின் ரசிகை ஒருவர் நீங்கள் தற்போது இருக்கும் பிக்பாஸ் போட்டியாளர்களில் உங்களுக்கு யாரை பிடிக்கும், நீங்கள் யாருக்கு ஓட்டு போடுவீர்கள் என்று கேட்டார். அதற்கு சாக்‌ஷி, என்னுடைய ஓட்டு முகேனுக்கு தான் என்று பதில் அளித்துள்ளார்.