தேசிய விருது: சிறந்த நடிகை – கீர்த்தி சுரேஷ்; சிறந்த தமிழ்ப்படம் – பாரம்!

ஒவ்வொரு ஏப்ரல் மாதமும் திரைப்பட தேசிய விருதுகள் குறித்த அறிவிப்பு வெளியாகும். ஆனால் மக்களவைத் தேர்தல் நடைபெற்றதால் திரைப்பட தேசிய விருதுகள் குறித்த அறிவிப்பு தேர்தலுக்குப் பிறகு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் 66-வது திரைப்படத் தேசிய விருதுப் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. சிறந்த தமிழ்ப்படமாக ‘பாரம்’ தேர்வாகியுள்ளது. சிறந்த ஹிந்திப் படமாக அந்தாதுன் தேர்வாகியுள்ளது. கீர்த்தி சுரேஷ் நடித்த மகாநடி படம் சிறந்த தெலுங்குப் படம் என்கிற தேசிய விருதைப் பெற்றுள்ளது. மேலும் அதே படத்துக்காக சிறந்த நடிகை என்கிற தேசிய விருதையும் பெற்றுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

தேசிய விருதுப் பட்டியல்: சிறந்த படம் – எல்லாரு (குஜராதி) சிறந்த இயக்குநர் – ஆதித்யா தர் (உரி) சிறந்த நடிகை – கீர்த்தி சுரேஷ் (மகாநடி) சிறந்த நடிகர் – ஆயுஷ்மா குரானா (அந்தாதுன்), விக்கி கெளசல் (உரி) சிறந்த அறிமுக இயக்குநர் – சுதாகர் ரெட்டி (நாள்) நர்கீஸ் தத் விருது – ஒண்டல்லா இரடல்லா (கன்னடம்) சிறந்த பொழுதுபோக்குப் படம் – பதாய் ஹோ சமூக நலனுக்கான சிறந்த படம் – பேட்மேன் (ஹிந்தி) சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான சிறந்த படம் – பானி (மராத்தி) சிறந்த துணை நடிகர் – ஸ்வானந்த் கிர்கிரே (சும்பக்) சிறந்த துணை நடிகை – சுரேகா சிக்ரி (பதாய் ஹோ) சிறந்த குழந்தை நட்சத்திரம் – பிவி ரோஹித், சஹிப் சிங், தல்ஹா அர்ஷத் ரேஷி, ஸ்ரீனிவாஸ் போக்லே சிறந்த பாடகர் – அர்ஜித் சிங் (பத்மாவத்) சிறந்த பாடகி – பிந்து மாலினி (நதிசரமி) சிறந்த வசனம் – தரிக் (வங்காளம்) சிறந்த திரைக்கதை (தழுவல்) – அந்தாதுன் சிறந்த அசல் திரைக்கதை – சி லா சோ சிறந்த சவுண்ட் என்ஜினியர் – உரி சிறந்த படத்தொகுப்பு – நதிசரமி (கன்னடம்) சிறந்த கலை இயக்கம் – கம்மர சம்பவம் (மலையாளம்) சிறந்த ஒப்பனை – மகாநடி (தெலுங்கு) சிறந்த இசையமைப்பாளர் – சஞ்சய் லீலா பன்சாலி (பத்மாவத்) சிறந்த பாடல் – நதிசரமி (கன்னடம்) சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் – ஆவ் (தெலுங்கு), கேஜிஎஃப் (கன்னடம்) சிறந்த நடனம் – க்ருதி மஹேஷ், ஜோதி டி தொம்மார் (பத்மாவதி பாடம் – கூமார்) சிறந்த தமிழ்ப்படம் – பாரம் சிறந்த தெலுங்குப் படம் – மகாநடி சிறந்த ஹிந்திப் படம் – அந்தாதுன் திரையுலகுக்கு ஏற்ற மாநிலம் – உத்தராகண்ட் சிறப்பு விருதுகள்: ஸ்ருதி ஹரிஹரன், சந்திரசூர் ராய், ஜோஜோ ஜார்ஜ், சாவித்ரி


Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *