விஸ்வாசம் சாதனையை முறியடித்த நேர்கொண்ட பார்வை: முதல் நாளிலேயே இத்தனை கோடி வசூலா?

ஹெச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் குமார் நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் வெளியான மாஸ் படம் நேர்கொண்ட பார்வை. ஹிந்தி படமான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் வெளியாகியுள்ளது. அஜித் இப்படத்தில் வழக்கறிஞராக நடித்து நீதிமன்றத்தில் வாதாடும் காட்சிக்கு திரையரங்கில் விசில் சத்தமும், கை தட்டல்களும் தான் காதுகளுக்கு கேட்டது. அந்தளவிற்கு இப்படத்தை ஏற்று தல தன்னம்பிக்கையுடன் இப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படத்தில் இவருடன் இணைந்து வித்யா பாலன், அபிராமி வெங்கடாச்சலம், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆண்ட்ரியா தைராங்க், டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே ஆகியோர் உள்பட 21 நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். பெண்களை மையப்படுத்திய இப்படத்தில் தல அஜித் பெண்களின் உரிமைக்காக, விடுதலைக்காக போராடியுள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான விஸ்வாசம் படத்தை கொண்டாடியதை விட நேர்கொண்ட பார்வை படத்தை தல ரசிகர்கள் அமர்க்களப்படுத்தி வருகின்றனர். நேற்று நள்ளிரவு 1 மணி முதல் பட்டாசு வெடித்து, பாலாபிஷேகம் செய்து ரசிகர்கள் கொண்டாடினர். இதையும் தாண்டி அஜித்தின் கட் அவுட்டிற்கு ஒரு சில ரசிகர்கள் பீர் அபிஷேகம் செய்ததாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், உலகம் முழுவதும் வெளியான இப்படம் தமிழகம் முழுவதும் 800 திரையரங்குகளில் திரையிடப்பட்டது. சென்னையில் மட்டும் 22 திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம் தமிழகம் முழுவதும் முதல் நாளில் ரூ.26 கோடி வரையில் வசூல் குவித்து புதிய சாதனை படைக்கும் என்று எதிர்பார்கப்படுகிறது என்று சினிமா விமர்சகர் சிவக்குமார் ராக்கராஜ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். சென்னையில் மட்டும் இப்படம் ரூ.1.58 கோடி வரையில் வசூல் குவித்து தல அஜித்தின் முந்தைய படமான விஸ்வாசம் படத்தின் முதல் நாள் வசூல் (ரூ.88 லட்சம்) சாதனையை முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

@rameshlaus Breaking: #NerkondaPaarvai took a gargantuan opening at the TN box office TN Day 1 Est. Gross 26crs… https://t.co/2wIqzse54f— Sivakumar Rokkaraj (@cinthaisiva) 1565316492000
அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் வர இருப்பதால், நேர்கொண்ட பார்வை படம் வசூலில் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தைத் தொடர்ந்து அஜித் மீண்டும் ஹெச் வினோத் இயக்கத்தில் தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள ஏகே60 என்ற படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தையும் போனி கபூர் தான் தயாரிக்க உள்ளார். இந்த மாதம் இறுதியில் இப்படத்தின் பூஜை நடக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் ஏகே60 படத்தில் போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.

#Thala #Ajith ‘s #NerKondaPaarvai takes a humongous/record opening in TN for a Working day – Thursday (Day 1) yeste… https://t.co/yQpHAH8Pq0— Ramesh Bala (@rameshlaus) 1565313791000

Tamil Rockers: அஜித் படத்தையும் விட்டு வைக்காத தமிழ் ராக்கர்ஸ்: நைட்டோடு நைட்டா நேர்கொண்ட பார்வை லீக்!