ரஜினி பா.ஜ.க.வை ஆதரிப்பதால் மன்றத்தை விட்டு வெளியேறும் ரசிகர்கள்…

காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக நாட்டுப்பற்று, அந்நிய நாட்டுச் சதி என்று ரஜினி தொடர்ந்து பா.ஜ.க.வை ஓப்பனாக ஆதரித்து வருவதால் அவரது மன்ற நிர்வாகிகள் பலரும் அதிர்ச்சி அடைந்து மன்றத்தை விட்டு விலக முடிவெடுத்திருப்பதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வருகின்றன.

காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக நாட்டுப்பற்று, அந்நிய நாட்டுச் சதி என்று ரஜினி தொடர்ந்து பா.ஜ.க.வை ஓப்பனாக ஆதரித்து வருவதால் அவரது மன்ற நிர்வாகிகள் பலரும் அதிர்ச்சி அடைந்து மன்றத்தை விட்டு விலக முடிவெடுத்திருப்பதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வருகின்றன.

சுமார் 25 ஆண்டுகால காத்திருப்புக்கு கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முற்றுப்புள்ளி வைத்தார்.ரஜினி தனக்கு சொந்தமான ரகாவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்கள் முன்னிலையில் தனது அரசியல் வருகையை உறுதி செய்தார். கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் நிற்க போவதாக அறிவித்தார். அதன் பின் அவரது அரசியல் பணிகள் வேகம் எடுத்தன. தனது ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றியவர் அதற்கு மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் நிர்வாகிகளை நியமித்தார். உறுப்பினர் சேர்க்கையையும் பூத் கமிட்டிகள் அமைக்கும் பணிகளையும் துரிதப்படுத்தினார். ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளின் வேகமான பணிகளால் தமிழ்நாடு முழுக்க ஒரு கோடி உறுப்பினர் சேர்க்கவும் 66 ஆயிரம் பூத் கமிட்டிகள் அமைக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த இலக்கை நெருங்கியும் விட்டார்கள். ஆனால் திடீர் ட்விஸ்டாக ரஜினி மக்கள் மன்றத்தில் இணைந்த உறுப்பினர்கள் கொத்து கொத்தாக விலகவிருப்பதாக தகவல்கள் வருகின்றன.

இது குறித்துப் பேசிய ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்,’ கடந்த ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தை ஒடுக்க நடந்த துப்பாக்கிச்சூட்டில் அப்பாவிகள் பலியானபோதே ரஜினி சமூக விரோதிகள் போராட்டத்தில் நுழைந்து விட்டார்கள், போராட்டம் போராட்டம் என்றால் நாடே சுடுகாடாகி விடும் என்று அரசின் பிரதிநிதியாக பேசியபோதே ரஜினி பக்கம் இருந்த ஒன்று இரண்டு நடுநிலைவாதிகளும் வெளியேறி விட்டார்கள். இப்போது மெல்ல மெல்ல பா.ஜ.கவின் முகமாகவே மாறி வருகிறார் ரஜினி. எனவே ரஜினி அரசியலுக்கு வருவதே தமிழக பா.ஜ.கவை காப்பாற்றத் தான் என்பதும் அவர் பின்னணியில் பா.ஜ.க இருப்பதும் தெளிவாக தெரிந்து விட்டது. ரஜினி நிச்சயம் பா.ஜ.க.வுக்காக ஓட்டு கேட்பார். ஆனால் நாங்கள் அந்த முட்டாள்தனத்தை நிச்சயம் செய்ய மாட்டோம்.

பா.ஜ.கவுக்கு ஓட்டு கேட்டு சென்றால் மக்கள் விரட்டி விரட்டி அடிப்பார்கள். இது தெரிந்து தான் பா.ஜ.கவை கழட்டி விடும் முடிவுக்கு அதிமுக வந்துவிட்டது. தெரிந்தே சுயலாபத்துக்காக ரஜினி பா.ஜ.கவை நோக்கி சென்று அவர்கள் வலையில் விழுந்து விட்டார். இன்னும் சொல்ல போனால் எங்களுக்கு விருப்பமே இல்லாமல் எங்களை அவர்களிடம் அடகு வைக்க பார்க்கிறார். இதற்கு தலைவர் அரசியலுக்கு வராமலேயே இருந்து இருக்கலாம். வந்தால் ஜெயிப்பார் என்று பேசிக்கொண்டாவது இருந்து இருப்போம். ஆனால் இப்படி தெரிந்தே பாழும் கிணற்றில் விழுகிறார்’என்று புலம்புகிறார்கள் மன்றத்தினர்.