கவினுக்கு நோஸ்கட் கொடுத்த சாக்ஷியின் அப்பா! நெத்தியடி பதில்

பிக்பாஸ் 3வது சீசனில் பெரிய சர்ச்சை ஏற்படுத்தியது கவின்-சாக்ஷி இடையே வந்த காதல் பிரச்சனைகள் தான். முதலில் காதலிப்பது போல பழகிவிட்டு பின்னர் கவின் விலகியதால் சாக்ஷி மனமுடைந்து அழுதார்.

அடுத்த மூன்று வாரங்களுக்கு இந்த பிரச்சனை தான் பிக்பாஸில் ஓடியது. இந்நிலையில் இன்று சாக்ஷி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். வெளியில் வந்த பிறகு அவர் மற்ற போட்டியாளர்களுடன் கமல் முன்னிலையில் உரையாடினார்.

அப்போது கவின் மன்னிப்பு கேட்டதோடு அங்கு வந்திருந்த சாக்ஷியின்அப்பாவிடமும் மன்னிப்பு கேட்டார். அதற்கு கவினுக்கு நோஸ்கட் கொடுக்கும் விதத்தில் ஒரு பதில் கொடுத்துள்ளார் சாக்ஷியின் அப்பா. “எதற்கு சாரி சொல்றாரு. கேம் தான் விளையாடுறேன்னு சொன்னீங்க. ஹர்ட் பண்ண மாதிரி எனக்கு தெரியல” என கூறினார் அவர். அதற்கு கவின் எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாகிவிட்டார்.