சிதம்பரம் கைதுக்கு ஸ்வீட் கொடுத்து கொண்டாடிய தி.மு.க., காரணம் இதுதானாம்!

சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு கொஞ்சமும் கண்டுகொள்ளாத கட்சி என்றால், அதன் கூட்டணிக் கட்சியான தி.மு.க.தான். சுவர் ஏறிக் குதித்த சி.பி.ஐ. விவகாரத்தை மட்டுமே கண்டித்துள்ளார் ஸ்டாலின். ஏனாம்,2011ல் திமுகவுக்கும், ராசாவுக்கும் என்ன செய்தார்களோ, அதுவே இன்று காங்கிரசுக்கும், ப.சிதம்பரத்துக்கும் நிகழ்கிறது. இடுக்கண் வருங்கால் என்று அன்றே சொன்னான் வள்ளுவன்' என்றும், 'தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்' என்கிறார்கள். 'ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் திமுக மீது சுமத்தப்பட்ட 2ஜி ஊழல் புகாருக்கு பெரும் பின்னணியாக இருந்தவரே சிதம்பரம்தான்.
n 2ஜி விவகாரத்துல அப்போதைய மத்திய அமைச்சர் ஆ.ராசாவை ராஜினாமா செய்யச் சொல்லி பிரணாப் முகர்ஜி மூலமா கலைஞருக்கே நெருக்கடி கொடுத்தது சிதம்பரம்தான். 'ராஜினாமா செய்யச் சொல்லிடுங்க. பிரச்சினை பெரிசாகாம பாத்துக்கலாம்' என்று கலைஞரிடம் பிரணாப்பை விட்டு பேச வைத்து அதன் பின்னர் ஆ.ராசாவை கைது செய்தது மட்டுமில்லாமல், கனிமொழியையும் இந்த வழக்கில் பிணைத்தவர் சிதம்பரம்தான். இந்த ஊழல் புகார்களால் திமுகவுக்கு நெருக்கடி கொடுத்து அதன் மூலம் தமிழகத்தில் காங்கிரஸுக்கு 63 தொகுதிகள் வரைக்கும் வாங்கிக் கொண்டதற்குக் காரணமும் சிதம்பரம்தான். அறிவாலயத்தில் திமுக -காங்கிரஸ் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும்போதே, அதே வளாகத்தில் இருக்கும் கலைஞர் டிவியில் ரெய்டு நடத்தி தயாளு அம்மாளிடம் விசாரணை நடத்தியது சிபிஐ. இதுபற்றியெல்லாம் அப்போது திமுக முக்கியப் புள்ளி ஒருவர் உள்துறை அமைச்சராக சிபிஐயை கையில் வைத்திருந்த சிதம்பரத்துக்கு போன் போட்டு, 'ஏன் இப்படி பண்றீங்க? தலைவர் ரொம்ப வேதனையில இருக்காரு' என்று கேட்டிருக்கிறார். அதற்கு ப.சிதம்பரம், 'இது கட்சி, அது ஆட்சி' என்று கூட்டணிப் பேச்சையும், சிபிஐ ரெய்டையும் ஒப்பிட்டுப் பதில் கொடுத்திருக்கிறார். சிதம்பரத்தின் வார்த்தைகள் அப்படியே கலைஞருக்கு கொண்டு செல்லப்பட்டபோது கொதித்துவிட்டார் அவர். 2ஜி ஊழல் மூலம் திமுகவை தமிழக அரசியலில் இருந்தே ஓரங்கட்டிவிட்டு காங்கிரசை பலப்படுத்தி தான் மாநில அரசியலுக்குத் திரும்புவது என்ற திட்டமும் சிதம்பரத்துக்கு இருந்தது. ஆனால் சிதம்பரத்தின் திட்டப்படி திமுக வீழ்ந்ததே தவிர, காங்கிரஸ் வளரவில்லை. சில ஆண்டுகளுக்கு முன் சிதம்பரத்தின் தாயார் மறைந்துவிட்டார். தனது நீண்ட நெடிய பொதுவாழ்வில் அரசியல் மாச்சரியங்களை எல்லாம் தூக்கிப் போட்டுவிட்டு எதிர்முகாமைச் சேர்ந்தவர்களின் இறப்புக்கு கூட அஞ்சலி செலுத்துவதும் இரங்கல் வெளியிடுவதும் கலைஞரின் வழக்கம். ஆனால் ப.சிதம்பரத்தின் தாயார் மறைவுக்கு கலைஞர் அஞ்சலி செலுத்த செல்லவில்லை. வீட்டில் சிலர், 'நாங்க போய் பார்த்துட்டு வந்துடட்டுமா' என்று கலைஞரிடம் கேட்டுப் பார்த்ததற்கு, 'வெட்கம் , சூடு , சொரணை இல்லாதவன் தான் அங்க போவான்' என்று பதில் சொன்னார் கலைஞர். மறப்போம், மன்னிப்போம்னு எப்போதும் சொல்கிற கலைஞரே அந்த அளவுக்கு பதில் சொன்னார் என்றால்… கடைசி காலத்தில் அரசியல் ரீதியாகவும், குடும்ப ரீதியாகவும் கலைஞர் அனுபவித்த வேதனைகளுக்கு சிதம்பரம் எவ்வளவு தூரம் காரணமா இருந்திருப்பார்னு பார்த்துக்கங்க. கலைஞரே மன்னிக்க முடியாத சிதம்பரத்தை நாங்க எப்படி மன்னிக்க முடியும் என்று கேட்கிறார்கள். அதனால்தான் சிதம்பரம் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்து ஆ.ராசா ஸ்வீட் எடுத்து கொண்டாடினாராம். சரிதானோ..?


Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *