பிக்பாஸ் வீட்டில் கதறி அழும் லாஸ்லியா…!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேரனை நாமினேட் செய்ததற்காக லாஸ்லியா கதறி அழும் புரோமோ வெளியிடப்பட்டுள்ளது.

100 நாட்கள் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி 57-வது நாளை எட்டியுள்ளது. ஒவ்வொரு வார இறுதியிலும் நாமினேஷன் செய்யப்படும் போட்டியாளர்களில் ஒருவரை மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்படுவது வழக்கம். அந்த வகையில் நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர் அபிராமி.Also Read… மதுமிதா தன்னைத் தானே தாக்கிக் கொள்ள என்ன காரணம்? – வெளிவராத தகவல்
இந்நிலையில், இந்த வார இறுதியில் வெளியேற்றப்படும் போட்டியாளர்களுக்கான நாமினேஷன் தொடங்கியது. போட்டியாளர்கள் எவிக்‌ஷனுக்கு நாமினேஷன் செய்யும் புரமோ வீடியோவை நிகழ்ச்சிக் குழுவினர் வெளியிட்டனர்.
அதில் லாஸ்லியா இயக்குநர்  சேரன் பெயரை பரிந்துரைத்தார்.

தனது பெயரை ஒருபோதும் வெளியேற லாஸ்லியா பரிந்துரைக்க மாட்டார் என்று சேரன் வெளியே பேசிக்கொண்டு இருக்கையில், உள்ளே லாஸ்லியா பிக்பாஸிடம் சேரன் பெயரை பரிந்துரைத்தார்.

இதனால், அனைவரும் பரபரப்புக்கு உள்ளானார்கள். சேரனின் முகம் இருண்டது. இந்த நிலையில், சேரன் பெயரை நாமினேட் செய்ததற்காக லாஸ்லியா கதறி அழும் புரோமோவை நிகழ்ச்சிக்குழு வெளியிட்டுள்ளது.


Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *