விஜய்க்கு தைரியம் இருந்தால் சிவகார்த்திகேயனோடு மோதட்டும்! – சசிகலா புஷ்பா

ரஜினிக்கு அடுத்து சூப்பர் ஸ்டார் யார் என்ற கேள்வி வந்தால் காலம் சிவகார்த்திகேயன் என அடையாளம் காட்டும் என்று மாநிலங்களவை எம்.பி சசிகலா புஷ்பா கூறியுள்ளார்.

சுமார் கால்நூற்றாண்டுக்கும் அதிகமாக சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். தற்போது அந்த இடத்தைப் பிடிப்பதற்காக பல நடிகர்கள் முயற்சி செய்து வருகின்றனர். ரஜினியை அடுத்து முன்னணி நடிகர்களாக தமிழ்த்திரையுலகில் வலம் வரும் விஜய், அஜித், ஆகியோரை அவரவர் ரசிகர்கள் சூப்பர் ஸ்டாராகவே பாவித்து வருகின்றனர். இந்த போக்கு ட்விட்டர் போன்ற சமூகவலைதளங்களிலும் அவ்வப்போது பேசுபொருளாகிறது.

சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ரஜினிக்கு அடுத்து சூப்பர் ஸ்டார் நடிகர் விஜய் தான் என்றார். மேலும் நடிகர் சிம்பு, விஜய் இடத்தில் இருக்க வேண்டியவர் என்று கூறிய சீமான், நேரம் தவறாமையை சிம்பு கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறினார்.

இந்நிலையில் இதுகுறித்து பிரபல வார இதழுக்கு பேட்டியளித்திருக்கும் மாநிலங்களவை எம்.பி சசிகலா புஷ்பா, சூப்பர் ஸ்டார் பட்டத்துடன் கடந்த 40 ஆண்டுகளாக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். அவர் கைவசம் தற்போது 4 படங்கள் இருப்பதாக சீமான் கூறியிருக்கிறார்.

மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அசோக் நகர் இடம் கைப்பற்றப்பட்ட போது மறைந்த முதல்வர் கருணாநிதியை சந்தித்து கோரிக்கை வைத்தார் விஜய். தலைவா பட பிரச்னையின் போது ஜெயலலிதாவிடமும், மெர்சல் விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமும் சரண் அடைந்தவர் நடிகர் விஜய். ரஜினிகாந்த் அப்படி இல்லை. பாபா படம் நஷ்டமடைந்த போது யாருடைய உதவியையும் நாடாத ரஜினிகாந்த், நஷ்டமடைந்த தயாரிப்பாளருக்கு பணத்தைத் திருப்பிக் கொடுத்த மிகச்சிறந்த பண்பாளர்.

சினிமா தொடர்பான எந்த பின்புலமும் இல்லாமல் சாதாரண குடும்பத்தில் பிறந்து சின்னத்திரை, வெள்ளித்திரையில் சாதித்து சூப்பர் ஸ்டார் இடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். விஜய்க்கு துணிச்சல் இருந்தால் சிவகார்த்திகேயன் படத்தோடு ரிலீஸ் செய்து போட்டி போட சொல்லுங்கள் பார்க்கலாம். வசூலில் யார் கில்லி என்று தயாரிப்பாளர் கூறிவிடுவார்கள்.

ரஜினிகாந்துக்கு அடுத்து யார் சூப்பர் ஸ்டார் என்ற கேள்வி வந்தால் காலம் சிவகார்த்திகேயனை அடையாளம் காட்டும்” என்று கூறியுள்ளார்.

READ  2020 புத்தாண்டு ராசி பலன்கள்.. 5 ராசிக்காரங்களுக்கு உச்சக்கட்ட அதிர்ஷ்டமாம் !