தர்ஷன் வெளியேறுவதற்கு முன் இப்படி ஒரு சதி நடந்ததா?- வைரல் செய்தி

பிக்பாஸ் வீட்டில் அனைவராலும் கொண்டாடப்பட்டவர் தர்ஷன். மக்கள் என்ன முடிவு எடுக்கிறார்களோ அது தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடக்கும் என்பார்கள்.ஆனால் தர்ஷன் எலிமினேஷன் விஷயத்தில் அது பொய் என்று தெரிகிறது. மக்களால் அதிகம் கொண்டாடப்பட்டவராக இருக்கிறார் தர்ஷன். அதற்கு உதாரணம் அவர் எலிமினேட் ஆன பிறகு எத்தனை பேர் தர்ஷன் எலிமினேஷனுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்பதை பார்த்திருப்போம்.இப்போது பிக்பாஸ் தர்ஷன் எலிமினேஷன் குறித்து ஒருவர் டுவிட் போட்டுள்ளார். அதாவது தர்ஷன் வெளியேறுவதற்கு முந்தைய நாள் பிக்பாஸ் குழுவினர் அவரது வீட்டிற்கு போன் செய்து, தர்ஷன் வெளியேறவில்லை, அவருக்கு உடைகள் கொண்டு வர கேட்டிருக்கின்றனர்.ஒரே நாளில் அந்த முடிவை மாற்றி தர்ஷனை வெளியேற்றிவிட்டார்கள் என பதிவு செய்துள்ளார். அவரது டுவிட்டிற்கு கீழ் பலரும் தங்களது கோபத்தை வெளிப்படுத்தியதோடு, தொலைக்காட்சி சரியாக ஏமாற்றுகிறார்கள் என்று கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை, ஆனால் தர்ஷன் மக்களால் கொண்டாடப்படும் ஒரு பிரபலமாக இருக்கிறார் என்பது உண்மை. At 5:46 PM today, @vijaytelevision called #Tharshan’s family and informed them he’s saved and asked them to bring clothes for Tharshan for finals. Now they completely changed the result and he’s evicted.Who decides the winner? No longer us. But Vijay TV, in the final minute!— George Vijay (@VijayIsMyLife) September 28, 2019