நானும் பள்ளியில் ஒரு ‘ஸ்கவுட்ஸ்’ மாணவியே: தமிழிசை பெருமிதம்!

ஸ்கவுட்ஸ் அண்ட் கைடஸ்க்கு தெலங்காணா ஆளுநர் தமிழிசை ஆலோசனை வழங்கினார். மாணவிகள் ரோல் மாடலாக வளரவேண்டும் என்று ஊக்கமூட்டினார். ஸ்கௌட்ஸ் & கைட்ஸ் கமிட்டி நாட்டிலேயே ரோல் மாடலாக வளர வேண்டும் என்று மாநில ஆளுநர், பாரத ஸ்கவுட் அண்ட் கைடஸ் தெலங்காணா மாநில பேட்ரன் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தன் ஆசையை வெளியிட்டார்.

அதற்கு தன்னாலான உதவிகள் எப்போதும் கிடைக்கும் என்றும் தெரிவித்தார். வியாழக் கிழமை ‘தோமல்குடா’ ககன்மஹாலில் உள்ள பாரத ஸ்கவுட்ஸ் அண்ட் கைடஸ் தெலங்காணா மாநில முதன்மை அலுவலகத்தில் ஸ்கவுட்ஸ் அண்ட் கைடஸ் நிறுவன நாள், விமர்சையாக கொண்டாடப்பட்டது. அதில் கலந்துகொண்ட ஆளுநர் தமிழிசை பேசுகையில் பெற்றோருக்கும் குருவுக்கும் கௌரவம் அளித்து, சமுதாயத்திடம் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.

தானும் கூட ஸ்கவுட்ஸ் அண்ட் கைடஸ் மாணவியே என்று நினைவு கூர்ந்த அவர், சமுதாயத்திற்கு எவ்விதம் உதவியாக இருப்பது, பிறரிடம் எவ்வாறு நடந்து கொள்வது போன்றவற்றை அங்கேயே கற்றுக் கொண்டதாக தெரிவித்தார். தான் மாணவியாக இருந்தபோது கைட்ஸ் பயிற்சி எடுத்துக் கொண்டதை நினைவு கூர்ந்தார். பின்னர் தெலங்காணா ஸ்கவுட்ஸ் அண்ட் கைட்ஸ் தலைமை ஆணையர் முன்னாள் எம்பி ‘கல்வகுண்ட்ல’ கவிதா பேசுகையில் மாநில ஆளுநர் ஸ்கௌட்ஸ் & கைட்சுக்கு வந்தது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.

இந்தப் பள்ளியில் அனைத்து வசதிகளும் உள்ளன என்றும் தற்போது அதில் 590 மாணவர்கள் படித்து வருவதாகவும் தெரிவித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தி வரும் நிகழ்ச்சிகளின் மீது அவர் அறிக்கை சமர்ப்பித்தார். பின்னர் ஸ்கவுட்ஸ் அண்ட் கைடஸ் பள்ளி வளாகத்தில் ஆளுநருடன் இணைந்து கவிதா செடிகள் நட்டார். தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப் பட்டது. அந்த நேரத்தில், 8 மாணவர்களுக்கு ராஜ்ய புரஸ்கார் விருது அளித்தனர். பீயர்ஸ் கன்ஸ்ட்ரக்சன்ஸ் நிறுவனத்தில் இருந்து அஸ்லாம் பின் மஹமது ரூ.10 லட்சம் நன்கொடைக்கான காசோலையை ஆளுநரிடம் அளித்தார்.

இந்த நிகழ்ச்சியில் தெலங்காணா ஸ்கவுட்ஸ் அண்ட் கைடஸ் துணைத் தலைவர் லட்சுமி நாராயணா, பொருளாளர் ராஜகோபால், இணைச் செயலர் ‘மஞ்சால ‘வரலட்சுமி, ஒருங்கிணைப்பு செயலாளர் பரமேஸ்வர் மற்றும் பலர் பங்கு கொண்டனர்.

தக்காளி சட்னி செய்வது எப்படி? How to prepare healthy Tomato Chutney? tomato chutney side dish

https://www.youtube.com/watch?v=u17mgQ3tpdQ

READ  உடலுறவில் அதிக இன்பத்தை பெறுவது ஆண்களா? இல்லை பெண்களா? புராணங்கள் என்ன கூறுகிறது தெரியுமா?