விஜய்யின் 64வது படம் பற்றி அடுத்தடுத்த புதிய அப்டேட்ஸ்

விஜய்யின் பிகில் படம் திரையரங்குகளில் கலக்கி வருகிறது. இப்பட ரிலீஸிக்கு முன்னரே தன்னுடைய 64வது படத்தின் படப்பிடிப்பை தொடங்கிவிட்டார் விஜய். இந்த படத்திற்கான படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகிறது. அங்கு கடும் மாசு பிரச்சனையால் படக்குழு தவிப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் தானும் தளபதி 64 படப்பிடிப்பில் இணைந்துவிட்டதாக நடிகை மாளவிகா மோகனன் டுவிட் செய்தார். இப்போது என்ன தகவல் என்றால் சர்கார் படத்திற்கு பிறகு விஜய்யுடன், நடிகர் பிரேம் குமார் இதில் நடிக்கிறாராம். பிரேமை அடுத்து சேத்தன், அழகன் பெருமாள், மேத்யூ வர்கீஸ் ஆகியோர்களும் நடிக்கிறார்கள் என்று தகவல் வருகிறது. பின் ஆண்டனி வர்கீஸ் படப்பிடிப்பில் வரும் டிசம்பர் மாதம் இணைகிறாராம்.

READ  ஓரினச்சேர்க்கையாளராக மாறும் இளம் நடிகை!