முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமாஜெயலலிதா மரணம் பற்றி சசிகலாவிடம் விசாரணை இல்லை; ஆறுமுகசாமி ஆணையம் முடிவு

சென்னை,ஜெயலலிதா மரணத்தில் எழுந்த சந்தேகத்தினை தொடர்ந்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறது.  பொங்கல் பண்டிகை விடுமுறைக்கு பின்னர் நேற்று முன்தினம் மீண்டும் விசாரணை தொடங்கியது.  இதில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆணையத்தின் முன் ஆஜரானார்.
விஸ்வாசத்தை விட 2 மடங்கு வசூல் - உலக அரங்கில் கலக்கும் ‘பேட்ட’

                   ‘பேட்ட’ படத்தின் நிறுவனம் 11 நாட்களில் ரூ100 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிவித்த நிலையில், ‘விஸ்வாசம்’ தரப்பில் ரூ125 கோடி வசூல் ஆகியுள்ளதாக அறிவித்தது. இதனால், வசூல் பற்றிய செய்திகள் பரபரப்பாக பேசப்பட்டது. ஒட்டுமொத்தமாக பார்க்கையில், தமிழக அளவில் ‘பேட்ட’ படத்தை காட்டிலும் ‘விஸ்வாசம்’ அதிக வசூல் செய்துள்ளதாக அதிகப்படியான செய்திகள் வெளியாகின.
விவேக் மனைவிக்கு வளைகாப்பு: சந்தனம் பூசிய தினகரன் மனைவி!

ஜெயா டிவி தலைமைச் செயல் அதிகாரி விவேக் ஜெயராமனுக்கும், தினகரனுக்கும் இடையே நிலவிய இடைவெளியை தீர்த்து, இரு குடும்பத்தினரையும் மீண்டும் நெருங்க வைத்திருக்கிறது குடும்ப நிகழ்ச்சி.ஜனவரி 20 ஆம் தேதி விவேக் மனைவிகீர்த்தனாவுக்கு வளைகாப்பு சென்னையில் தாஜ் கன்னிமரா ஹோட்டலில் நடந்தது. காலை 10 முதல் 12 வரை முகூர்த்தம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
திமுகவில் எம்ஜிஆர் இணைந்தாரா? அதிமுகவுடன் அமமுக இணைவதற்கு வாய்ப்பே கிடையாது - தினகரன்

“அதிமுகவுடன் அமமுக இணைவதற்கு வாய்ப்பே கிடையாது” என்று தினகரன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.புதுச்சேரியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, “தமிழகத்தில் பாஜகவும், அதிமுகவும் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கும்.தமிழக மக்களுக்காக ஜெயலலிதா கண்ட கனவுகளை நிறைவேற்ற தினகரன் அதிமுவுடன் இணைய வேண்டும்.
வாழ்நாள் உள்ளவரை மதவாத சக்திகளுடன் கூட்டணி இல்லை டிடிவி தினகரன் உறுதி

  வாழ்நாள் உள்ளவரை மதவாத சக்திகளுடன் கூட்டணி இல்லை டிடிவி.தினகரன் உறுதி பரமக்குடியில் இன்று நடைபெற்ற சமூக வலைதள ஆர்வலர்கள் கூட்டத்தில்… அமமுக-வின் கொள்கை என்பது அம்மா அவர்கள் தமிழக மக்களுக்காக என்ன திட்டங்கள் கொண்டுவந்தார்களோ அவற்றை செயல்படுத்துவதும் அவரின் கனவான VISION 2023ல் சொல்லப்பட்ட அனைத்தையும் நிறைவேற்றித்தருவதும் தான். புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் ஏழை எளியோர் என அனைத்து தரப்பு மக்களுக்கும் தேவையானவற்றை செயல்படுத்துவோம்.